பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவருட் சிந்தனை

மனம் ன்னக்கு உற்ற துணையாகிட நயந்தருள்க!

மனத்தகத்தானாக, தலைமேலானாக இருந்தருளும் இறைவா! என் மனத்தில் நீ இருக்கிறாயா? நான் தேடிப் பார்த்தேனே! நீ இல்லையே! என் மனத்தில் உன்னைத் தவிர மற்றதெல்ல. ம் குவித்திருக்கின்றன.

அம்மம்ம! மாநகராட்சிக் குப்பைத் தொட்டியைவிட மோசமான குப்பைகள் என் மனத்தில் குவிந்துள்ளன. என்மனம் எங்கெங்கோ சுற்றுகிறது; எதை எதையோ எடுத்துகொண்டு வருகிறது:

என் மனம் எளிதில் பற்றிக் கெ:ணர்ந்த செய்திகள் எதுவாலும் எனக்கு யாதொரு பயனும் இல்லை: இறைவன் என் மனம் உலைப்பானையில் நின்று திளைத்தாடும் ஆமைபோல் களிக்கிறது:

திருந்திய நல் அமரர்களுக்குத் தலைவா! என்னையும் திருத்தி ஆட்கொள்க! மனம் போகும் போக்கில் நான் சொல்லாமல் இருக்க அருள் செய்க!

என் மனத்தின் மீது மேலாணை தந்து அருள் செய்க’ மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்திட அருள் செய்க!

மனதிற்கு விஷயங்களை கொண்டு சேர்க்கும் பொறிகள் விஷத்தோடு இல்லாதபடி அருள் செய்க மனம் நன்றே நினைத்திட அருள் செய்க!

என் மனம் அன்பிலே கரைந்து தூய்மையிலே நிலைத்திட அருள் செய்க! என் மனம் கவலையிலிருந்து மீள்க! என் மனம் ஊக்கத்துடன் பணிகளில் ஈடுபட அருள்க!

பணியில் இன்பம் காணும் பண்பை என் மனம் அடைத் திடுக! என் மனம் தல்லறத்தையே நாடும்படி அருள் செய்க! என் மனம் எனக்கு உற்ற துணையாக இருக்க தயந்தருள் செய்க: இறைவா, அருள் செய்க!