பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளாே 7 :

இறைவா கடமையைச்செய்ய முழு ஆற்றல் தா!

இறைவா, எந்தையே! நின் பொன்னடிகள் போற்றி! போற்றி இறைவா, நாள்தோறும் எண்ணற்ற நொடிகள் ஒடிக் கழிகின்றன. ஆனால் கடமைகள் முடிந்தபாடில்லை.

ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக எனக்குக் கிடைத்த வேலைன்ய முழு முயற்சியின்றி செய்ய இயன்ற வரையில் செய்தலையே, நான், கடமையைச் செய்து விட்டதாக, நின்ைத்து ம்ன நின்றவு கொள்கின்றேன்.

இறைவா, கோடிக்கணக்கான செங்கற்கள் கொட்டிக்

கிடந்தால் அழகு அமைந்த EF 5 . அவற்றைக் கொண்டு அழகு மாளிகை அமைக்க வேண்டும். கடமை களின் தொகுப்பே வாழ்க்கை. ‘ - -

இறைவா, நான் செய்ய வேண்டிய கடமைகளில் சிறியது இல்லை. பெரியது இல்லை. அனைத்துக் கடமைகளுமே என் வாழ்க்கையை வளர்ப்பன. உறுதிப் படுத்துவன. நான் எந்த ஒரு கடமையைப் புறக்கணித் தாலும் என் வாழ்க்கையைப் பாதிக்கும். r - இறைவா, என் உரிமைகள், என் கடமைகளின் வாயிலாகத்தான் என்னை வந்தடைகின்றன. படைக் கட்டுப்பாட்டுணர்வுடன் செய்யப்பெறின் , எந்தக் கடமை யும் எளிதில் முடியும். கடமைகள் செயற்பாட்டின் வழி உரிமைகள் வந்தமையும். -

இறைவா, எனக்குக் கடமையே தாய் கற்பகத் தரு! இறைவா, தான் என் கடமைகளைத் தெரிந்து தெளிவுடன் முடிவு செய்வேன்! தராதரமின்றி எல்லாக் கடமை களையும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவேன்!

இறைவா, என்னுடைய உரிமைகளுக்குரிய விலை ‘யாகிய கடமையைச் செய்தலாகிய பணியை மேற்

கொள்ள முழு ஆற்றல் தந்து அருள்க!