பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திருகுன்றக்குடி அடிகளார் 79

கெளரவம்” பந்தம் விடுதலை பெற அருள்க!

இறைவா, அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் என்று எழுதித் தந்த தலைவ: ஆருரரை ‘அடியேன் அடியேன்” என்று கூற வைத்து ஆட்கொண்ட தலைவா! இந்த மானுட உலகத்தில் நான் வாழ்ந்து வருகின்றேன்! சுதந்தரமாகவா? . இல்லை, இல்லை: இறைவா, ஏராளமான பந்தங்களுடன்! மனைவி, மக்கள், வாழ்வு பந்தங்கள் கூட உண்மையில் பந்தங்கள் ஆகா! இறைவா, இவை வளர்ச்சிப் போக்கில் ஆன்ம விடுதலைக்குத் துணை செய்யும். * ,

ஆனால், நான் மிகவும் விரும்பிப் போற்றுகின்றேனே கெளரவம்’ என்ற ஒன்று! இறைவா, அது பந்தங்களுள் எல்லாம் பெரிய பந்தம், தீமைகளுள் எல்லாம் பெரிய தீமை. இறைவா! நான் கெளரவம் என்ற பந்தத்திற்கு ஆள கிச் சமுதாயத்தினின்று ஒதுங்குகின்றேன். என்னை உயர்த்திக் கொள்கின்றேன்! கெளரவம் என்ற பெயரால் எளியரிடத்தில் அன்பு காட்டுவதில்லை; பழகுவதில்லை.

கெளரவம் என்ற பெயரால்-வறட்சித் தன்மையால், வீணே அலைகின்றேன். செலவழிக்கின்றேன். இறைவா, ஏன் உன்னிடத்தில்கூட கெளரவத்தின் பெயரால் எளிதில் நான் அடிமையாவதில்லை. நான் தருக்கியே தலையால் நடக்கின்றேன்.

இறைவா, என்ன கொடுமை? அடிக்கொருதரம் என் கெளரவம் என்னாகுமோ என்று பயப்படுகின்றேன். இறைவா, இத்தகைய இழிநிலையில் கெளரவம் என்ற பிரமையில் வீழ்த்து கிடக்கும் என்னை எடுத்தாள்க!

இறைவா, என்மீது நின் கருண்ை பொழியவேண்டும். நான் கெளரவம் என்ற அசுர பந்தத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். யார்க்கும் எளியனாய் வாழ்ந்து தொண்டு. செய்ய வேண்டும். இறைவா, அருள் செய்க: