பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - திருவருட் சிந்தினை

அன்பே சிவமாக ஞானத்வ நிலையினை அருள்க:

இறைவா, அன்பே உருவாக அமர்த்துள்ள அண்ணலே நான் வேண்டுவது அருள் செய்க: பொன் வேண்டேன். புகழ் வேண்டேன். இறைவா, சில மணித்துளிகள் தனித்து வாழ்ந்திட அருள் செய்க! -

நின் அருளின் மாட்சியைக் காட்டும் இயற்கை எழிலின் மடியில் தவழ்ந்து நின்னை அனுபவிக்கும் ஆரா அனுபவத் தினை அருள் செய்க இறைவா, நான் வேண்டுவது வீடு அன்று! இறைவ அன்பே’

அன்பினிலே என் உயிர் கரைந்து விட வேண்டும். அந்த அன்புக் கரைசலில் உன்னை நான் அமுதமெனக் கண்டு அனுபவிக்க வேண்டும். இறைவா, என் உள்ளத்தில் என் வாழ்வைப் புனிதமாக்கும் ஒரு துளி அன்பினை அருள்செய்க!

என் வ. ழ்க்கை பட்டமரமாகி விடுமோ என்ற கவலை அரித்து அழிக்கிறது: யாதுமோர் குறைவில்லை! ஆனாலும் என் இதயத்தில் வற்றாத ஊற்றாக அன்பு வேண்டும்.

இந்த வையகத்தை அன்பால் வளர்த்துப் பேண வேண்டும். அன்பே அன்பே’ என்றழுதழுது அரற்றிடுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! இந்த அன்பில் இந்த வையகத்தை நனைத்து, புகைக் காளான்களை அகற்றிட அருள் செய்க! அன்பால் என் ஆன்மா பூரித்துப் பொலிவுடையதாகிட அருள் செய்க! -

என்னை வருத்தும் ஆணவ வெப்பம் தணித்திடுக. இறைவா, ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த என் னுடைய அன்யே! அருள் செய்க. அன்பே சிவமாக அமர்ந்து ஞானத்தவம் இயற்றும் இன்ப நிலையினை அருள் செய்க!