பக்கம்:திருவருட் பயன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இ-ள் : தோன்ருத் துணையாய்க் கலந்து கின்று சாத்து கடத்தின அருளே, கண்ணும் காணப்படும் வடிவினை யுடையதாக விட்டு நீங்காத குரிசில் என்க. இதனுல், அருள் குருவடிவுகொண்டு வந்தமை கூறப்பட்டது. விளக்கம் : உயிர்க் குயிராய் உள்நின்றுணர்த்திய இறை வன், அருளே திருமேனியாகப் புறத்தே ஆசிரியத்திருமேனி தாங்கி எழுந்தருளிவந்து ஆன்மாக்களே ஆட்கொண்டருள் புரியும் முறைமையினே அறிவிப்பது, அருளுருநிலை என்னும் இவ்வதிகாரமாகும். அருளுருநிலை என்பது அருள், தான் மேற்கொள்ளும் திருவுருவின் நிலே என விரியும். இறைவனது அருட் சத்தியானது உயிர்கட்கு ஆதாரமாய் விளங்குந்திறத் தினே மேலே அதிகாரத்திற் கூறிய ஆசிரியர், அத்திருவருளே உயிர்களின் பாசப்பிணிப்பினே நீக்கி மெய்யுணர்வு அளித்தற் பொருட்டு ஆசிரியத்திருமேனி தாங்கி வெளிப்பட்டு அருள் புரியுந்திறத்தினே இவ்வதிகாரத்தில் விரித்துக் கூறுகின்றர். ஆதலால் இது மேலேயதிகாரத்தோடு இயைபுடையதாயிற்று. இவ்வதிகாரத்தின் முதற்குறள், முதல்வனே குருவாக எழுந்தருளும் முறைமையினே உணர்த்துகின்றது. காணும் குறியாகி நீங்காத கோ, அறியாமை, உள்நின்று அளித்ததே என முடிக்க, அறியாமை-அறியாமல்; கண்ணுக் குத் தோன்ருதவாறு. உள்நின்று அளித்தல்-உயிர்க்குயிராய்க் கலந்துநின்று அருள்சுரத்தல். அளித்தது என்றது, உப கரித்ததாகிய திருவருளே. அளித்தது, வினையாலணயும் பெயர். காணும் குறியாகி-கட்புலனுற்காணுதற்குரிய ഖച്ഛി&r யுடையதாகி. கோ-தலேவன்: என்றது, இங்குக் குருவடிவு கொண்டு எழுந்தருளிய இறைவனே. அறியாமையுள்' என