பக்கம்:திருவருட் பயன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

என இந்நூலுரையாசிரியர் நிரம்பவழகிய தேசிகர் தமது உரைச்சிறப்புப் பாயிரத்தில் தெளிவாகக் குறிப்பிடுதலால் நன்கு புலனாம்.

திருவருட் பயனுக்கு அமைந்த உரைகளில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது நிரம்ப அழகிய தேசிகர் உரையாகும். கொன்றை மாநகரம் சண்முகசுந்தர முதலியார் அவர்களுக்குப்பின் மெய்கண்ட நூல்கள் பதினான்கின் உரையினையும் தொகுத்து மெய்கண்ட சாத்திரம் என்ற பெயரால் வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முதலியாரவர்கள் கி.பி.1897-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்கள். அப்பதிப்பில் திருவருட் பயனுக்கு வெளியிடப்பெற்றுள்ள உரை நிரம்ப அழகிய தேசிகர் உரையாகும். அதனையடுத்து கி.பி.1898 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மகாவித்துவான் கந்தசாமி முதலியார் மாணாக்கர் கா.சுந்தரமூர்த்தி முதலியார் அவர்கள் வெளியிட்ட சித்தாந்த சாத்திர உரைத் தொகுப்பில் திருவருட் பயனுக்குப் பழைய பதவுரையும் நிரம்ப அழகியர் பொழிப்புரையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள். இதற்குப் பதவுரை செய்தவர் நாமம் பிரதிகளில் காணப்படவில்லை. ஆயினும் சித்தாந்த சாத்திரங்களுக்குப் பெரும்பாலும் பதவுரை வேலப்பபண்டாரம் செய்திருக்கின்றனர் எனத் தாம் வெளியிட்டுள்ள பதவுரையைப்பற்றி அவர் குறித்துள்ளார். சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தார் இருமுறை வெளியிட்டுள்ள சித்தாந்த சாத்திர உரைப்பதிப்புக்களில் திருவருட் பயனுக்குச் சிந்தனையுரை வெளியிடப் பெற்றுள்ளது. இவ்வுரை நிரம்ப அழகிய தேசிகர் உரையைத் தழுவிப் பதவுரையாக அமைந்த தாயினும் பொருள் கொள்ளும் நெறியிலும் பாட பேதங்களிலும் அவ்வுரையினின்றும் சிற்சில இடங்களில் வேறுபட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பெற்ற திருவருட்பயன் உரைப்பதிப்புக்களில் உரையாசிரியர்கள் தம் உரைகளிற்கொண்ட பாடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/11&oldid=513085" இலிருந்து மீள்விக்கப்பட்டது