பக்கம்:திருவருட் பயன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



10

இவையெனவும், திருவருட்பயனாகிய குறள்வெண்பாக்களின் சொன்முடிபு பொருண்முடிபுகள் இவையெனவும் எளிதின் அறிந்துகொள்ளத்தக்க விளக்கக் குறிப்புக்கள் இடம்பெற வில்லை. இந்நிலையில் நூலின் மூலபாடம் இதுவெனவும் உரையாசிரியர் இன்னபாடத்தைக்கொண்டு இவ்வாறு உரை யெழுதியுள்ளார் எனவும், சொன்முடிபு பொருண்முடிபுகள் இவையெனவும், இந்நூலாசிரியர் தாம் கூறும் பொருள் முடிபுகட்கு இவ்வாசிரியரால் ஆதரவாகக் கொள்ளப்பட்ட தொன்னூல் முடிபுகள் இவையெனவும், அதிகார இயைபுடன் அவ்வவ் அதிகாரங்களிலுள்ள குறள்களுக்கிடையேயமைந்த பொருளியைபு இவையெனவும் தமிழ்பயிலும் மாணாக்கர்கள் தெளிவாகவுணர்ந்து கொள்ளத்தக்க வகையில் இந்நூலுரையினை மேற்கோள் ஒப்புமை விளக்கத்துடன் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் நெடுநாட்களாகவே எனக்கு உண்டு. சைவ சித்தாந்த நூல்களை முறையே பயில எண்ணியவர்கள் முதற்கண் திருவருட்பயனையும் பின்னர்ச் சிவப்பிரகாசத்தையும் பயிலுதல் இன்றியமையாதது என்பர் பெரியோர். முதலிற் பயிலுதற்குரிய சித்தாந்த நூலாகிய இந்திருவருட்பயனுக்கு, இந்நூல் தோன்றிய வரன்முறையினை அடியொற்றித் திருக்குறள், சைவத்திருமுறைகள், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் ஆகிய முன்னூல்களிலிருந்து மேற்கோள் ஒப்புமைகாட்டி, நிரம்ப அழகிய தேசிகர் உரையினையும் அதனோடு வேறுபட்ட இடங்களிற் சிந்தனையுரையையும் விளக்கும் முறையில் புதுவாக ஆராய்ந்து எழுதிய உரைவிளக்கத்துடன் இந்நூலாசிரியர் உமாபதிசிவாசாரியார் திருவருளாலும் அவர் தம் ஞானசாரியர் மறைஞானசம்பந்தர் திருவருளாலும் இந்நூல் சைவசித்தாந்த மகா சமாச மணிவிழா நன்னாளில் வெளிவருகின்றது. உமாபதி சிவம் திருவடிக்கண் உள்ள ஆர்வம் ஒன்றே காரணமாக விரைந்து எழுதப்பெற்ற இவ்வுரை விளக்கத்தில் எனது அறியாமை காரணமாக நேர்ந்த பிழைகளைப் பொறுத்தருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/12&oldid=513086" இலிருந்து மீள்விக்கப்பட்டது