பக்கம்:திருவருட் பயன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 விகாரத்தால் தொக்கது என இத்தொடர்க்கு வரைந்த இலக் கணக் குறிப்பாலும் இனிது விளங்கும். அகலர்க்கு (அவருள் விஞ்ஞானகலர்க்கு) அருளேத்தரும்: (பிரளயாகலர்க்கு அருளே) ஆக்கும்; சகலர்க்கும் வந்து அருளும் என உருபும் உம்மையும் விரித்துப் பொருள்கொள் வர். ஈண்டு, தருதல் என்றது, உயிர்களின் அறிவுக்கறிவாய் உள்நின்று தன்மைக்கண் அருள் சுரத்தலே. ஆக்குதல் என்றது, தனக்கேயுரிய தெய்வவடிவுகொண்டு முன்னிலேக் கண் தோன்றிநின்று அருள் வழங்குதலே வந்தருளுதல் என்றது, படர்க்கையிடத்ததாக ஆசிரியத்திருமேனி தாங்கி வந்து மெய்ப்பொருளே உபதேசித்தலே. சகலருள் எல்லார்க் கும் அன்றி அவருள் கன்மமலப் பிணிப்பினை அறவே அகற்று தற்கேற்ற பக்குவமுடையார்க்கே இறைவன் குருவாய்வந்து மெய்ப்பொருளே உபதேசிப்பன் என்பது புலப்படுத்துவார், 'வினேநீக்குஞ் சகலர்க்கு என அடைமொழிபுணர்த்துக் கூறினர். . - ஆணவமலத்தினேயுடைய விஞ்ஞானுகலர்க்கு ஆனவ மலத்தை நீக்கி அறிவுக்கறிவாய் அனுக்கிரகம்பண்ணி மோட் சத்தை அடைவிப்பன். ஆணவமலத்தினேயுங் கன்மமலத் தினையுமுடைய பிரளேயாகலர்க்கு அவர்களைப்போல மானும் மழுவும் சதுர்ப்புயமும் காளகண்டமும் திரிநேத்திரமுமாக எழுந்தருளி வந்து ஆணவமலத்தினையுங் கன்மமலத்தினேயும் நீக்கி அனுக்கிரகம்பண்ணி மோட்சத்தை அடைவிப்பன். ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்றுமலத்தினையும் உடைய சகலர்க்கு அவர்களைப்போல மானிடச்சட்டை சாத் திக்கொண்டு ஆசாரியமூர்த்தமாக எழுந்தருளிவந்து ஆணவம் காமியம் மாயை என்கிற மூன்று மலங்களேயும் நீக்கி அனுக் கிரகம்பண்ணி மோட்சத்தை அடைவிப்பான்’ என்பது இக் குறளுக்கு அமைந்த சிந்தனையுரையாகும்