பக்கம்:திருவருட் பயன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 காந்தக் கல்வினிடத்து நெருப்புத் தோன்றுமாயின், இரண்டு மில்லையென்பதாம். இதல்ை, கிருவடிஞானம் குாவனை யின்றியமையாச் சிறப்பிற்றென மேலது வலியுறுத்தப் பட்டது. விளக்கம்: இறைவன் குருவாகிவந்து உணர்த்தினுலன்றி உயிர்கள் ஒன்றையும் உணரமாட்டாவென்பது உணர்த்து கின்றது. பானு ஒழிய, நற்கல்லின்கண் அனல்மடின், இவன் ஒழிய உயிரின் ஞானம் நண்ணியிடும் என்க. நற்கல்-நல்ல சூரியகாந்தக்கல், பானு.குரியன். ஒழிதல். முன்னில்லாது நீங்குதல். அனல்-தி. படுதல்.உண்டாதல். சூரியன் எதிர்முகமாக நில்லாது நீங்கிய நிலையில் சூரிய காந்தக்கல்லிடத்தே தீயுண்டாகாதவாறுபோல், இறைவன் குருமேனிகொண்டு எதிர்முகமாகத் தோன்ருத நிலையில் உயிர்களிடத்தே ஞானம் பிரகாசியாது என்றவாறு.

  • சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (திருமந்திரம். 17) 5 3 எனவரும் திருமூலர் வாய்மொழியையும், ‘சூரிய காந்தக்கல்லி னிடத்தே செய்ய சுடர்தோன்றியிடச் சோதி தோன்று மாபோல் ஆரியனும் ஆசான்வந் தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்’ . (சித்தியார்-சுபக் 280) எனவரும் அருணந்திசிவாசாரியார் வாய்மொழிப்பொருளேயும் அடியொற்றியமைந்தது இக்குறட்பாவாகும்.