பக்கம்:திருவருட் பயன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



104

சு. அறியும் நெறி

அஃதாவது, உண்மைப் பொருளை உணரும் முறைமை. அருளுருநிலைகூறி, அதனால் அறியும் பொருளுண்மை கூறுதலின், மேலை அதிகாரத்தினோடு இதற்கு இயைபுண்மை யறிக.

        51. நீடும் இருவினைகள் நேராக நேராதல்
            கூடுமிறை சத்தி கொளல்.

இ-ள் : ஒன்றையொன் றொவ்வாது மிக்கு வளர்ந்து வரும் புண்ணிய பாவங்கள் இரண்டும் தம்மில் ஒப்பாகவரும் பருவத்திலே யுண்டாகும், சிவனுடைய சத்கி பதிதல்.

நேராக நேராதல், ஒர் புண்ணியத்திற்கு ஒர் பாவம் ஓர் வகையான் ஒத்திருத்தலாம். அதுவன்றி, வாக்கு மனங் காய மென்னும் மூவகையால் இயற்றப்பட்ட புண்ணியங்கள் முழுவதும் ஒர் பங்கும், பாவங்கள் முழுவதும் ஒர் பங்கும் மாசுப் பொன்னும் இரும்புங் கன்மத்தால் தலையொக்கத் தாங்குதல் போலப் பலத்தாற் சமனாதல். சத்திபதிதலாவது, நிலையாத இயல்பினையுடைய உலக நடையினை அஞ்சி வீட்டு நெறியினை விரும்பும் வண்ணம் உயிர்களது உணர்வினைத் திருந்தச்செய்தல். ஒன்றை யொன்று ஏற்றததாழ்வுபடில் அவையவை இகல் செய்து இழுக்கு மென்பதாம்.

இதனால், உண்மையுணர்தற்கு எதுவான சத்தி பதியும் எல்லை கூறப்பட்டது.

விளக்கம் : இறைவன் குருவாகத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து மெய்ப்பொருளை உணர்த்தியருள அதனால் உயிர்கள் தம்மையும் தலைவனையும் உலகப்பொருள்களையும்