பக்கம்:திருவருட் பயன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



106

அவை தம்முள் ஒன்றால் ஒன்று அழிக்கப்பட்டுச் சுந்தோப சுந்தர் ஒருவர் மற்றவரால் அடிக்கப்பட்டு இருவரும் இறந்தாற் போன்று கெட்டொழியுமாதலின், அவ்வாறு அவ்விரு வினையும் அழியும் நிலையில் தம்முள் ஒத்தலே இருவினையொப்பென்பர் ஒருசாரார். சஞ்சிதமாய்க்கிடந்த புண்ணியங்களும் பாவங்களும் மிகுதி குறைவின்றித் தம்முள் ஒத்தலே இரு வினையொப்பென்பர் மற்றொருசாரார். இவ்விருசாரார் கொள்கைகளையே இந்நூலுரையாசிரியர் நிரம்ப அழகிய தேசிகர் இக் குறளுரையில் எடுத்துக் காட்டுகின்றார்.

உயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுள் மிக்கன இரண்டும் தம்முள் ஒத்துக்கெட்டனவாயினும், அவைநீங்க அவற்றிற் குறைந்தனவாய்க் கெடாது எஞ்சியுள்ள புண்ணிய பாவங்கள் தத்தம் பயனைத்தருதற்குத் தடையில்லை. இனி உயிர்கள் செய்யும் இருவினைகள் முழுவதும் அளவாலும் பயனாலும் தம்முள் ஒக்கும் நிலையடைதல் இயலாது. அங்ஙணம் ஒருகால் ஒக்குமாயினும் அவை உயிரால் நுகர்ந்து கழிக்கப்படாமையால் ஆணவமலம் நீங்குமாறின்மையின் அதுபற்றி ஆன்மா முத்தியடைதல் என்பதும் இயலாததொன்றாகும். எனவே மேற்கூறியவை இருவினையொப்பு’ என்பதற்குப் பொருளல்ல எனமறுத்து, 'ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணிய பாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்புநிகழ்ந்து விடுவோனது அறிவின்கண் அவ்விரு வினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தலே ஈண்டு இருவினையொப்பென்பதற்கு பொருள்” (சிவஞானபாடியம் 8-ஆம் சூத்திரவுரை) என விளக்குவர் மாதவச் சிவஞானமுனிவர்.

உயிர்கட்கு இருவினையொப்பு உளதாகவே, ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற்குரிய துணைக்காரணங்கள் எல்லா வற்றோடுங் கூடுதலாகிய மலபரிபாகமும், மலபரிபாகம் காரணமாகச் சத்திநிபாதமும் உளவாம். மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடத்திய திரோதான சத்தி, அம்மலம் பரிபாகம்