பக்கம்:திருவருட் பயன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 இறைவனேக் குறித்துக்கூறும் தொடர்கள் இங்கு உளங் கொளத்தக்கனவாம். எணணிலவாய்ப் பலவாகிய உயிர்த் தொகுதியினே அநேகன்' என்ற சொல்லாற்குறித்தார் ஆசிரியர். அநேகம்-பல. பலவாகிய உயிர்த்தொகுதியினேக் குறித்து வழங்கும் அநேகன் என்றசொல், ஏகன்’ என்ற சொற்போன்று ஆண்பாலுணர்த்துவதன்றென விளக்குவார், நிலம் நிலன் என்ருற்போன்று ஏகம் என்பதன் மகரம் ஏகன் என னகரமாய்த் திரிந்து நின்றது எனக் குறித்தார் உரையாசிரியர். இருள்வடிவாகிய ஆணவமலத் தினே இருள் எனக் குறித்தார். கருமம்-கன்மமலம்.உலகத்திற்கு முதற்காரணமாகிய மாயை என்பது, சுத்தம், அசுத்தம் ಜT Sರ್ಿ இருதிறப்படுதவின் மாயை இரண்டு’ என எண்ணினுர், இவ்வாறு உயிர்திணையும் அஃறிணையும் விரவி எண்ணி ஆக இவை ஆறு என அஃறிணை முடிபுகூறியது, பெரும்பான்மை யாகிய மிகுதிபற்றியதாகும். இவை ஆறும் இன்ன காலத்தில் தோன்றின என்பதின்றிக் காலங் கடந்து முன்னமேயுள்ள பொருள்களாம் என்பார், இவை ஆறும் ஆதி இல், என்ருர், ஆதி-ஒருகாலத்திற்ருேன்றியது. ஆதி இல் என்ற தொடர், அனுதி என்னும் பொருளேத் தந்தது அனுதி-காலங்கடந்து என்றும் உள்ளபொருள். இவை ஆறும் அனுதியேயுள்ளனவாயின், இப்பொருள் களே அடிப்படையாகக்கொண்டு மக்கள் உணர்ந்துகொள்ளு தற்குரிய உண்மைகள் யாவை என வினவிய மானக்கர்க்கு, அவ்வுண்மைகளே வகைப்படுத்துணர்த்துவது அடுத்தவரும் குறட்பாவாகும். 53. செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் (சேர்ப்பவனும் உய்வா னுளனென் றுணர்.