பக்கம்:திருவருட் பயன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 54. ஊனுயிரால் வாழும் ஒருமைத்தே ஊளுெடுயிர் தானுணர்வோ டொன்ருந் தரம். இ-ள் : உடம்பானது உயிரோடு கூடிப் பிரிப்பின்றி கடைபெறும் ஒற்றுமையினையுடைத்து, அவ்வுடம்போடுயிர் கள் கிறைந்த ஞானத்தோடு கூடி ஒன்றுபட்டு வேறறகில பெறுங் தகுதியன. எனவே உடலகத்து உயிர்போலக் கலக்க கின்று கடத்தும் என்பதாம். 5. உடம்பென்ற பொது வகையால் ஐவகையுடம்பும் அடங்கும். அவையடங்கவே கிலமுதல் நசதமீருகிய தத்துவம் எல்லாம் அடங்கும் எனக்கொள்க. விளக்கம்: இஃது, இறைவன் உயிர்க்குயிராய் நின் றுணர்த்த உணருந்தன்மையது ஆன்மா வென்பதுணர்த்து கின்றது. ஊைெடு உயிர் தான், உணர்வோடு ஒன்று ஆம் தரம், ஊன் உயிரால் வாழும் ஒருமைத்து-என முடிக்க. உடம் போடு கூடிய உயிர், நிறைந்த ஞானமாகிய திருவருள் வேறற நின்று உணர்த்த(ப் பொருள்களே உணரும் முறைமை, உடம்பானது உயிர் வேறற நின்று (தன்னேச் செலுத்த அதனுல் நடைபெறுவதனேயொத்த ஒற்றுமைத் தன்மையினே யுடைத்து என்றவாறு. ஊன் என்றது, உடம்பினே ஈண்டு 'உணர்வு' என்றது, நிறைந்த ஞானவுருவினதாகிய முழு முதற்பொருளே. ஐவகையுடம்பாவன, தூலசரீரம், சூக்குமசரீரம், குண சரீரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் என்பன.இவை முறையே அன்னமயகோசம், பிரானமயகோசம், மனுேமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் எனப் பெயர் பெறுவன என்பர். (சித்தியார்-சுபக்கம் 211-215)