பக்கம்:திருவருட் பயன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 Hட்டுக்காணத்துணிதல். பார்த்தது.அருள் நோக்கால் தன்னேக் கண்டுகொண்டிருப்பதாகியதிருவருள். சிற்றறிவினையுடைய உயிர், முற்றறிவினகிைய இறை வனது ஞானத்தைத் தன் சிற்றறிவால் ஆராயாமலும்,அதனைச் சுட்டியறிய முயலாமலும், தன் முனைப்பினுலே அதனே முற்பட்டுக் காணத்துணியாமலும் அவ் அருளின் வழி அடங்கி நிற்றலே அதனேக் காணுதற்குரிய உபாயம்ாம் என்ற வாறு. "ஒராமல் மந்திரமு முன்னுமல் நம்பரனேப் ப்ாராமற் ப்ார்த்துப் பழகுநாள் எந்நாளோ? என்ருர் தாயுமாருைம் அவ்வாறு உயிர்க்குயிராய் உபகரித்து நிற்கும் திரு வருளேக் கண்டபின் செய்யத்தக்கது யாது? என வினவிய மானுக்கர்க்குச் செய்யத்தக்கது. இது என அறிவுறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும். 59. களியே மிகுபுல ளுக்கருதி ஞான வொளியே யொளியா வொளி. இ~ள் : இத்தன்மையவாகிய ஞானத்தினக் காணப் பெற்றமையால் வருமகிழ்ச்சியைப் பெரிய விடயமாக கினைந்து, ஞானமாகிய வொளியன்றி வேறு உனக்கு ஒர் ஒளியின்ருகும்படி அதனுட்புக்குக் காந்து கிம்பாயாக காந்து கிற்றல், விகற்பமறக் கூடி கிற்றல். விளக்கம் : ஞானத்தினேக் காணப்பெற்ருல் அதனுட் கலக் குமாறு உணர்த்துகின்றது. களி - ஞானத்தினேக் காணப் பெற்றமையா லுளதாகிய பேரின்பமாகிய மகிழ்ச்சி. மிகு புலன் - உயிரினது உணர்வு அழுந்தி நுகர்தற்குரிய பெரிய விடயம். ஞானவொளியே ஒளியாக ஒளித்தலாவது, மெய்யுணர்வாகிய அவ்வொளியை யன்றி வேறு எந்த உணர்வும் ஒளியாகத் தோன்ருத்வாறு அம்மெய்யுணர்வுட்புக்குத் தான் என்னும் உண்ர்வு தோன்ருது