பக்கம்:திருவருட் பயன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 வெறுப்பினல்லது அருளினையடைதல் கூடாதென்பதாம் என்க. இதல்ை அருளினேயடைதற்கு எது கூறப்பட்டது. விளக்கம்: குறையுணர்வாகிய பசு அறிவாலும் பாச அறிவாலும் உணரப்படாத முதல்வன், அருளுருக்கொண்டு குருவாகி எழுந்தருளி வந்து மெய்ப்பொருளே அறிவுறுத்த, அம்முதல்வனது திருவடிஞானத்தால் தன்னேயும் தலேவனே யும் தத்துவப்பிரபஞ்சத்தையும் தன் அறிவின்கண்ணே ஆராய்தறிந்த நல்லுயிர், நிலமுதல் நாத மீருகிய பாசத் தொகுதி பேய்த்தேரின் இயல்பினதாய் நிலையின்றிக் கழிவது என்று அறிந்து நீங்கவே, இறைவனது திருவருள்ஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப் பட்டு விளங்க, அதனுல் தானும் விளக்கமுற்றுத் திகழுமாறு கூறுதலின், இவ்வதிகாரம் உயிர்விளக்கம் என்னும் பெயர்த் தாயிற்று. மேலே அதிகாரத்தால் ஆன்மசுத்தி கூறுதலின் இது, மேலேயதிகாரத்தோடு இயைபுடையதாயிற்று. இவ்வதிகாரத்தின் முதற்குறள், பிறப்புத் துன்பமாதல் உணர்ந்தார்க்கே சிறப்பென்னும் வீடுபேற்றினேயருளும் செம் பொருளேயடைதற்குரிய வேட்கை தோன்றும் என்பது உணர்த்துகின்றது. தூநிழல் ஆர்தற்கு ஆரும் ('அடைதி’ எனச்) சொல்லார்; தொகும் இதுபோல்வதே தான் அதுவாய் நிற்கும் தரம் என இயைத்துப் பொருள்கொள்க. துாநிழல்-தூய்மையுடைய குளிர்ந்தநிழல். ஆர்தல்-வந்து பொருந்துதல். சொல்லுதல் என்றது, ஈண்டு வருக என வேண்டியழைத்தலே. தொகுதல்-வந்து அடைதல், தான் என்றது உயிரின. அதுவாய் நிற்றல்-அத்திருவருளேச்சார்ந்து அதன்வழி அடங்கி நிற்றல். நிற்குந்தரம்-நிற்கும் முறைமை.