பக்கம்:திருவருட் பயன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கடுங்கோடையாகிய வெயில் வெம்மையி ல்ை வருந்து வோர், குளிர்ந்த நல்ல நிழலேக்கண்ட பொழுது, யாரேனும் தம்மைநோக்கி வருக என அழைத்தல் வேண்டும் என்பதின் றித் தாமே விரைந்து அந்நிழலேயடைந்தாற்போல, பிறவி வெப்பத்தால் வருந்திய உயிரும் தனக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும் திருவருளின்வழி தானேயடங்கி நின்று விளக்கமுற்றுத்திகழும் என்பதாம். 'துர்நிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் என்ற த குல், அவ்வாறு தொகுற் குமுன்னே அன்னுேர் கடுவெயிலால் வருந்தினமை குறித்தவாறு. இதல்ை பிறவிப்பாசம் கடுங் கோடையின் இயல்பிற்ருய் உயிர்க்கு வெம்மையை விளேப்ப தென்பதும், முதல்வனது திருவருள் அக்கோடையை நீக்கும் குளிர்ந்த நிழலேயொத்து உயிர்களுக்குத் தண்ணருள் வழங் குவதென்பதும் உடன் புலப்படுத்தியவாறு. "உராத்துனேத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி’’ என வரும் சிவஞானபோதத் தொடர்ப்பொருளே அடியொற்றியமைந்தது, இவ்வதிகாரத்தின் முதற் குறளாகும். இதன்கண் “துள்நிழல்’ என்றது, ஆதித்தனது ஒளியையெனக்கொண்டு, ஆதித் தன் உச்சியிலே வந்தகாலத்துப் பவித்திரமாகிய ஆதித்த துடைய நிழல் அதற்குள்ளே (அப்பளிங்கினுள்ளே) அடங்கு கிறதற்கு ஒருவரும் உபசாரம் சொல்ல வேண்டுவதில்லே . இந்தமுறையைப்போல இருவினையொப்பு வந்தகாலத்துத் திருவருள்வந்து அவனேக் கவளிகரித்துக்கொள்ளுதற்கு ஒருவர் சொல்லவேண்டுவதில்லே' எனப் பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர். 'பளிங்கினிழலுட் பதித்த சோதியானே' (6–91–2) எனவரும் அப்பர் அருள்மொழி நோக்குக."தூணிழல்' என்றும் பாடம். -