பக்கம்:திருவருட் பயன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கொண்டு 'கானுந் தன்மையையுடைய கண்ணுக்கு ஆதித் தப்பிரகாசமானது பூதஇருளே நீக்கிப் பதார்த்தங்களேக் காட்டக்கண்டும். நான்தானே கண்டேன் என்கிற விருதா வாகிய பாவம் எந்தக்காலம் தீரும். அதுபோல, அறியத் தன்மையை உடைய ஆன்மாக்களுக்குத் திருவருளானது பாசத்தை நீக்கித் தன்னேக் காட்டத்தக்கதாகக் கண்டும், தானே கண்டேன் என்கிறது எந்தச் செனனத்திலே நீங்கும்’ எனப் பதப்பொருளும் விளக்கமும் கூறுவர் சிந்தனையுரை யாசிரியர். இவ்வாறு பொருள் கூறுங் கால், இக்குறட்பா ஒட்டு என்னும் அணிதழுவியதாகக் கொள்ளுதல் வேண்டும். இருள்மலத்தில் அழுந்திக்கிடக்கிற ஆன்மா தன்னக் கண்டறிதற்பொருட்டு இறைவனது திருவருள், காட்டும் உதவியைச் செய்கின்றது என்பது, 《猩 வஞ்சனேயார் ஆர்பாடுஞ் சாராத மைந்தனைத் துஞ்சிருளில் ஆடல் உகந்தானேத் தன்தொண்டர் நெஞ்சிருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து அஞ்சுடராய் நின்ருனே நான்கண்ட தாரூரே (4-19-81 எனவும், ' காட்டுவித்தால் ஆரொருவர் காணுதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே’ (6-95-3) எனவும் வரும் அப்பர் அருள்மொழிகளால் நன்கு விளங்கும். திருவருள் செய்யும் உதவியைத் தெளிந்தார்க்கும் தெளி யாதார்க்கும் உள்ள வேற்றுமை யாது? என வினவிய மானுக் கர்க்கு அதனே விளங்க அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 64. ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல்.