பக்கம்:திருவருட் பயன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 நற்கேண்மையார்க்கு அல்லால், எடுத்துச் சுமப்பானே இன்று கிடைக்கத்தகுமே-என இயைத்துப் பொருள்கொள்க. நற்கேண்மையார் என்றது, சரியை கிரியை யோக நெறிகளைப் பின்பற்றி ஒழுகிமுடித்து ஞானநெறியை மேற் கொள்ளும் நிலேயில் இறைவனிடத்து மெய்யன் புடைய ராகிய பெருமக்களே. எடுத்துச்சுமப்பான் என்றது, 'அன்றே என்ற ன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமுங் குன்றே யனேயாய் என்னே ஆட்கொண்டபோதே - கொண்டிலேயோ இன்ருேர் இடையூறெனக்குண்டோ எண்டோள் - முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே (திருவாசகம்) என ஆளுடைய அடிகள் அருளியவாறு தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் எம் தலைவனுகிய நீயே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என அடியார்கள் கொடுக்க, அவ்வாறே ஏற்று அவர்க்குவரும் நலந் தீங்குகளேயெல்லாம் தானே ஏற்றுக் கொண்டருளும் முதல்வனே. கிடைத்தல்-தமக்குரிய நிலேயிற் பெறுதல். தகுமே-தகுமோ? இன்று-இப்பிறவியில். 'சரியை கிரியா யோக் பாதங்களே அனுட்டித்து முடித்து ஞானபாதக் கேள்வியையுடைய பேர்களுக்கல்லாது, உடல் பொருள் ஆவி மூன்றும் கொடுக்கச் சுமக்கிறவனே இப்போது உனக்குக் கிடைக்கத்தகு மோ’’ என்பது சிந்தனேயுரை. எடுக்கிறவன் ஒருத்தன் சுமக்கிறவன் ஒருத்தன் என வேறு வேறு கூற வேண்டுமோ? சுமக்கிற பிரமமும் நானே என்ருல் வரும் குற்றம் யாது? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது. அடுத்துவரும் குறட்பாவாகும்.