பக்கம்:திருவருட் பயன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}50 66. வஞ்ச முடைெருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனே போயினனே சொல். இ_ள்: ஒருவன் சேமித்த பொருளினை ஒருவன் காவினல் கவர்ந்துகொண்டு எக, மற்றவன் உறங்குதல் செய்தானே, அவ்விடம் விட்டு நீங்குதல் செய்தானே, மாணவகனே சொல்வாயாக, இதல்ை, அதுபோலக் கேடின் தி கிாம்பிகிற்கும் ஞானசத்தியினே வஞ்சித்து அதன் முதலாய ஞேயத்தினை யுடைத்தாதல் அரிதென்பது கூறப்பட்டது. இதுவும் முன்னதுவும் ஒட்டென்னும் அலங்காாம். விளக்கம்: விழிப்பு நிலையாகிய நனவுக்காலத்திலேயே பிற னது வஞ்சனேயாற் பொருளேயிழந்து வருந்தும் ஆன்மா முற்றுணர்வுடைய பிரமமாதல் இயலாது என்பது உணர்த்து கின்றது. ஒருவன் வைத்தநிதி, ஒருவன் வஞ்சமுடன் கவர, (மற்றவன்) துஞ்சினனே (அன்றி அவ்விடத்தைவிட்டுப்) போயினனே சொல்-என இயைத்துரைக்க. துஞ்சுதல்-உறங் குதல். போதல்-அவ்விடத்தைவிட்டுநீங்குதல். துஞ்சுதலு மின்றிப் போதலும் இன்றி விழிப்புடன் அவ்விடத்தில் இருக்கும் நிலேயிலேயே தன்பொருளே வஞ்சத்தால் ஒருவன் கவர்ந்துசெல்ல அதனே அறிந்துகொள்ளமாட்டாத அறிவுக் குறைபாடுடைய ஆன்மா, முற்றுணர்வுடைய முதல்வன் நானே யெனக்கூறுதல் யாவராலும் இகழ்ந்து நகைத்தற்குரிய பெரும் பேதைமையாம் என்பது கருத்து. ‘வஞ்சகமாக ஒருவன் ஒரு பதார்த்தத்தைக் கொண்டுவந்து வைத்து அவனே அறியாமல் எடுத்துக்கொண்டுபோய்த் திரும்பவந்து