பக்கம்:திருவருட் பயன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இதல்ை, ஆன்மாவை அருள் தன்வயத்ததாக்குமாறு கூறப்பட்டது. - விளக்கம்: ஆன்மா, தன்னகத்து இருள்கெட, அருளி னுள்ளே அடங்கி நிற்குமாறு கூறுகின்றது. தனக்கு நிழல் இன்ரும் தம்பம், ஒளிகவரும் தம்பம் எனத் தனித்தனி இயையும். தம்பம்-தூண்; என்றது, இங்குப் பளிங்கினுலாகிய தூணினே. ஒளி.சூரியகிரணம். கவர்தல்அதற்ை கவர்ந்துகொள்ளப்பட்டு அதனுள்ளேயடங்குதல் தம்பம் என-துண்போல; என, உவம உருபு. கவர-அருள் ஆன்மாவைத் தன்னுள் அடங்குமாறு கவர்ந்து கொள்ளு மாயின். இருள் நில்லாது- ஆணவ இருள் ஆன்மாவின்கண் நிலைபெருது நீங்கும். 'மத்தியான காலத்துப் படிகமானது, ஆதித்தப் பிரகா சத்தைக் கவர்ந்து பஞ்சவன்னங்களேயும் பற்ருமல், தன்னி டத்திலே களங்கம் அற நின்றற்போல, ஆன்மா சிவஞானத் துடனே கூடி அதுவாய் நிற்கவே பாசம் நில்லாது” என்பது இக்குறளுக்கு அமைந்த சிந்தனையுரையாகும். “சுத்த படிகமானது, இருள்வந்து மேலிட்ட அவதரத்து அந்த இருளோடுங்கூடி இருளின் நிறமாயிருந்தும், பஞ்ச வன்னங்களோடுங்கூடின அவதரத்து அந்தப் பஞ்சவன்னங் களின் நிறமாயிருந்தும், ஒளிமேலிட்டபொழுது அந்த ஒளி யோடுங்கூடி ஒளிதானுய் இருந்தும் வரும். அதுபோல, ஆன்மாவும், ஆணவமலம் மேலிட்டு மறைத்த அவதரத்து அந்த மலத்தோடுங்கூடி அறியாமையாய்க் கிடந்தும், அப்படிக் கிடக்கச்செய்தே கலையாதி தத்துவங்களோடுங் கூடிப் பிரபஞ்ச காரியப்பட்டுச் சகலனாகியும், இவை இரண்டு பகுதியும் நீங்குவதாக அருள் மேலிட்ட அவதரத்து அந்த அருளோடுங்கூடி அறிவாய் நின்றும், இங்ங்னம் கேவலகிை