பக்கம்:திருவருட் பயன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இரண்டுமல்லவென்று வேதாகமங்கள் சொல்லுகையினுலே அத்துவிதமாயிருக்கும்’ என்பது சிந்தனையுரை. 'ஆன்மா சிவத்தோடுங் கூடி ஒன்றுபட்டழிவதுமில்லே, இரண்டுபட்டு நீங்குவதுமில்லை என்றதென அறிக. இதற்குப் பிரமாணம் இந்நூலிலே, உடலுயிர்கண்ணருக்கன் அறி வொளிபோற் பிறிவரும் அத்துவிதம் (7) என்றதும் இப் பொருள் பற்றியென அறிக. அன்றியும் திருவருட்பயனில், 'ஒன்ருலும். இல் (75) எனவும், 'தாடலே.போற்...கொள்'(74) எனவும், இந்நூல்களன்றித் திருவருளேப்பெற்று அநுபவித்த அடியார்கள் திருவாக்குகளிலும் உண்டான கருத்து. சிவாநந்தமாலையில், "தாணுவினுே டத்துவிதஞ் சாதிக்கு மாணவுனே ஆணவத்தோ டத்துவித மாக்கினரார் - கோணறவே என்னுணை என்னுணே என்னுணே ஏகமிரண் டென்னுமற் சும்மாவிரு’ (276) என்னும் வகைகளில் இப்பொருளைக் கண்டுகொள்க. ஆகையால், திருஷ்டாந்தத்திலுைம் அநுபவத்திலுைம் சிவனேப் பெற்ற ஆன்மாக்கள் முத்தியால் ஒன்றுபட்டு அழிவதுஞ் செய்யாமல் இரண்டுபட்டு நீங்குவதுஞ் செய்யாமல் அத்துவிதமாய்நின்றே அநுபவிப்பார்கள் என்பது கருத்து’’ (சிவப்பிரகாசம் 87-ம் செய்யுளுரை) என மதுரைச்சிவப் பிரகாசர் கூறும் விளக்கம் இங்கு உணரற்பாலதாகும். பிறவி நீங்கிச் சிவனேக்கூடிப் பொருந்துமாறு யாதென வினவிய மானுக்கர்க்கு உணர்த்தும் முறையில் அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். w - 76. உற்ருரும் பெற்ருரும் ஒவா துரையொழியப் பற்ருரும் அற்ருர் பவம்