பக்கம்:திருவருட் பயன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பொருளேப் பொருந்தின பேர்களும், தெளியப்பெற்ற பேர் களும் நிட்டையைப் பொருந்தாவிடில் செனனம் ஒழியாது. எல்லாப்பற்றையும்விட்டு நிட்டையைப் பொருந்தினவர்களே பின்பு செனனம் அற்றவர்கள்’’ எனப் பொருளுரைப்பர் சிந்தனேயுரையாசிரியர். உரையொழியப் பற்றுதலாவது, எல்லாப் பற்றினேயும் விட்டு நிட்டையைப் பொருந்துதல். பற்ருர்-பற்றுதலேப் பொருந்திநிற்பார். - நிட்டை கூடுதல் எவ்வாறு என வினவிய மாணுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 77. பேயொன்றுங் தன்மை பிறக்கு மளவுமினி நீயொன்றுஞ் செய்யாம னில் இ~ள். பேய் பிடியுண்டோாது தன்மை உனக்கு உண்டாமளவும் நீ மேல் யாதொரு செயலுஞ் செய்யாது அசைவற கிம்பாயாக. பேய் பிடியுண்டாாது செயலெல்லாம் பேயின் செயலா மாறுபோல உன் செயலனைத்தும் இறைவன் செயலாமளவும் என்பது கருத்து. பின்னர் அச்சாதனை இன்று என்பதாம். இனி என்றதஞன் முன்னர்ச் செய்ய வேண்டுவ அனைத்தும் செய்து முற்றியதென்பது உம். பின்னிலைக்குச் செயலின் மையே வேண்டுவதென்பது உம் கண்டு கொள்க. இதல்ை சமாதிசெய்வார்க்கு அதுமுதிர்த்து கைவரு மாறு கூறப்பட்டது. விளக்கம்: நிட்டை கூடுவார்க்கு அது முதிர்ந்து கைவருமாறு உணர்த்துகின்றது.