பக்கம்:திருவருட் பயன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 "ஒருவனப் பிசாசுபிடித்தபோது அவன் அதன் வசமா குற்போல, சிவானுபூதியான நிட்டை கூடுமளவும் உன் போதஞ் சீவியாமல் நில்’’ என்பது சிந்தனையுரை. 'பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டாரென் றுந்தீபற காணுதார் காணுரென் றுந்தீபற’ (திருவுந்தியார்.35) என்பது இங்கு ஒப்புநொக்கற்பாலதாகும். இங்ங்னம் தம் செயல் அற நிட்டை கூடிஞேர், தாம் முன்பு செய்துவந்த நியமங்களாயுள்ளவையெல்லாம் செய்து வருவார்களோ? அன்றி வேண்டாமென்று விட்டுவிடுவார் களோ? என வினவிய மாளுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 78. ஒண்பொருட்க னுற்ருர்க் குறுபயனே யல்லாது கண்டிடுப்போர் கைப்பொருள்போற் காண். இ-ள் : ஒள்ளிதாய மெய்ப் பொருளினது எல்லையைத் தலைப்பட்டார்க்கு அவ்விடத்து எயும் பேரின்பம்ேபன்றி, மற்றுள்ள யோக முதலிய தொழில்கள் யாவும் உறங்கு வோர்கையிற் பண்டம் போல, மெல்லெனத் தன் வயத்திலே நீங்குவதாக அறிதி, தாமே வலிது ப்ேபதன்று என்பதாம். இகளுல் அவர் சமய சாாம் நீங்கு முறைமை கூறப்பட்டது. விளக்கம் : நிட்டை கூடிைேர்க்குச் சங்கற்ப விகற் பங்கள் தாமே நீங்குமாறு கூறுகின்றது. ஒண்பொருள் என்றது, உயிர்களின் அகத்தே சோதி யாகவும் உலகின்புறத்தே சுடராகவும் திகழும் ஞானத்திர ளாகிய முழுமுதற்பொருளே.