பக்கம்:திருவருட் பயன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப இன்னே பெறுதி நீ முன்னிய வினேயே’ (திருமுருகாற்றுப்படை-62-66) எனவரும் நக்கீரர் வாய்மொழியால் நன்குணரலாம். இத்தகைய பேரின்பத்தை அடைதற்கு ஆன்மா இறை வன்பாற் செலுத்தும் இடையருப் பேரன்பே சாதனமாகும் என்பது, "அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே'(திருமந்திரம்-279) எனவரும் திருமூலர் வாய்மொழியாலும், ‘அன்பினுல் அடியே ன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யான்.இதற் கிலனுெர் கைம்மாறு’ (திருவாசகம்-389) என வரும் திருவாதவூரடிகள் மணிமொழியாலும் நன்கு தெரியப்படும். சு. ஐந்தெழுத்தருள்நில அஃதாவது, ஐவகைப்பட்ட கிருவெழுத்தாகிய அருளினது முறைமை. இதனையும் ஒர் திருவருளாகக் கூறியருளினர், விட்டு செறி காட்டுதலால், அவ்வாறே சமாதியினையடைதல் கூடாதார்க்கு இதனை விதிப்படி இதவே அங்கிலை கூடுமாதலின், மேலேயதிகாசத்திைேடு இயைபுடைத்தெனக் கொள்க .