பக்கம்:திருவருட் பயன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 இவ்வதிகாரமாதலின் மேலதிகாரத்தோடு இயைபுடைய தாயிற்று. இதன் முதற்குறள், எல்லாநூற்பொருள்களும் தன் பொருளேயாகத் திரண்டு கூடிய சிறப்புடையது திருவைந் தெழுத்தென்பது உணர்த்துகின்றது. தெரியுப்புகின், அருள்நூலும் ஆரணமும் அல்லாததும் ஐந்தின்பொருள் நூல் என இயையும். அருள்நூல்-இறைவன் உயிர்கள்மேல்வைத்த பேரருளால் அருளிச்செய்த சிவாகமங் கள். ஆரணம்.வேதம். அல்லாதும்.அவையல்லாதனவும்; மேற் குறித்தவாறு இறைவனுலன்றி அவனருள்பெற்ற பெரியோர் களால் இயற்றப்பட்ட பல சாத்திரங்கள். ஐந்தின் பொருளா வன, பதி பசு பாசங்கள். . வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே ’’ (3-49-1, என ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்துள்ளமையும், ' அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை யெழுத்தின் மந்திரம் இரண்டு ' (சிலப்-காடுகாண் 128-9) என வரும் தொடரில், பஞ்சாக்கரமாகிய திருவைந்தெழுத்தினே இளங்கோவடிகள் சிறப்புடைய மந்திரங்கள் இரண்டினுள் முன்வைத்து ஒதியுள்ளமையும், எல்லாநூற்பொருள்களும் தன் பொருளேயாகத்திரண்ட இத்திருவைந்தெழுத்தின் பெருமை யினை நன்கு புலப்படுத்துவனவாகும். ' அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனேத்தும்-அஞ்செழுத்தே ஆனந்த தாண்டவமும் ஆருறுக் கப்பாலாம் மோனந்த மாமுத்தி யும் ’’ (உண்மைவிளக்கம்.44) எனவரும் திருவதிகை மனவாசகங்கடந்தார் வாய்மொழிப் பொருளைச் சுருங்க விளக்கும் முறையில் அமைந்தது. இக் குறட்பாவாதலறிக.