பக்கம்:திருவருட் பயன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன்கை ஒசைகொள், அதனில் நம்மேல் ஒழித்தரு ளோங்கும் மீள வாசியை யருளும், மாயா, மற்றது பற்ற உற்றங்கு ஈசனில் ஏகமாகும், இதுதிருவெழுத்தின் ஈடே' - சிவப்-92) எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளும், இதற்கு, அஞ்ஞானமாகிய மலமும் அதனேடுங் கூடியிருக்கப்பட்ட திரோதான சத்தியும் ஆன்மாவைப்பொருந்தாமல் நீங்கும்படி சிவத்தை முன்னக உச்சரிக்க, நீயும் அப்படி உச்சரிப்பா யாகில், நவ்வாகிய திரோத சத்தியும் மவ்வாகிய மிலத்தின் மேலீட்டை நீக்கி அருளாகநின்று பிரகாசிக்கும். அதுவு மன்றியே, அங்கனம் மலத்தினின்று மீளவிட்ட வவ்வாகிய அருளும் சிவ்வாகிய சிவத்தையும் தாரா நிற்கும். அப்படி மலபாகம் வந்த மகத்தான ஆன்மா, முன்சொன்ன அருள் தாரகமாகச்சென்று அந்தச் சிவத்தோடுங் கூடி இரண்டற நின்று அனுபவிக்கும். இங்ங்னஞ் சொல்லப்பட்ட இது ரீ பஞ்சாக்ஷரத்தின் முறைமையாம்' என மதுரைச் சிவப் பிரகாசர் எழுதிய உரையும், இறைவன் ஆன்மாக்கள் பொருட்டுச் செய்தருளும் இருவகை நடங்களின் இயல்பும் இத்திருவைந்தெழுத்தின் உள்ளிடாக அமைந்த முறையினேப் புலப்படுத்தி நிற்றல் உணரத்தக்கதாகும். பதி பாசம் ஆகிய இரண்டிற்கும் நடுவேநின்ற ஆன்மா, பதியையடையாது பாசத்துட்பட்டு வருந்துதல் ஏன்? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். . 84. விரியமரு மேவியவ்வை மீளவிட சித்தம் பெரியவினை தீரிற் பெறும்.