பக்கம்:திருவருட் பயன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 முதலாக உச்சரிக்கும் உபாயம்’ எனவும், கொண்டு, ஆரா தரீன பண்ணுவாய், சர்வான் மாக்களுக்கும் தாரகமாய் இருக் கிற பொருள், ஐயோ, ஆன்மாக்களேச் செனன மரணத்திலே விடாது, அந்த மலமும் திரோதமும் திரும்பிப்பாராது; மேலான சிவம் முதலாக உச்சரிப்பாய்’ எனப் பொருள் வரைந்தார் சிந்தனே உரையாசிரியர். நிரம்ப அழகிய தேசிகருரையில் ஆராதி ஆதாரம்’ என்பதற்குத் தமக்கு ஆதாரமாருக எண்ணி’ எனவரும் உரைத்தொடர், மூலாதாரம் முதல் ஆரு தாரங்களிலும் பிரணவத்தை முதலாகக்கொண்டு நகராதி ஐந் தெழுத்தினயும் எண்ணிப் போற்றும் முறையினைக் குறிப்ப தென்பர். - இத்திருவைந்தெழுத்திலே நிட்டை கூடத்தக்கதாக ஒதும் முறைமை யாதோ? என வினவிய மாளுக்கர்க்கு, அதனே விளங்க அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட் பாவாகும், . . . . 87. சிவமுதலே. ஆமாறு சேருமேல் தீரும் பவமிது ஒதும் படி. - இ-ன் சிகார வகாசம் இரண்டும் ஆதிக்கண்ணதே ஆம் வண்ணம் உச்சரித்தல் கூடுமாயின், அங்கிலேயே, உனது பிற விக் துன்பம் நீங்கும்; மாணவகனே! வீட்டினைக் காமுற்ற நீ உச்சரிக்கும் முறைமை இது என்க. இதல்ை முத்தர் ஒதுமாறு கூறப்பட்டது. விளக்கம்: முத்தியை நாடுவோர் திருவைந்தெழுத்தினே ஒதும் முறை இது என உணர்த்துகிறது. சி, வ, முதலே ஆமாறு-சிகார வகாரமென்ற இரண்டும் முதற்கண் அமையுமாறு.