பக்கம்:திருவருட் பயன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 உயிரின விட்டின்பத்திலே இருத்தும். அன்றியும். அவ்வருளே, அந்தச் சிவத்திற்குக் குற்றம் சீர்ந்த திருமேனியாய் இருப்பது என்க. இகளுல் திருவைந்தெழுத்தில் வகாரமாகிய அருளினது தன்மை வகுத்துக் கூறப்பட்டது. விளக்கம்: திருவைந்தெழுத்து, இறைவனது அருளின் உருவமாம் என்பது அறிவுறுத்துகின்றது, வ-வகாரமாகிய அருள். சி-சிகாரமாகிய சிவம். ய.யகார மாகிய உயிர். 'வ. சி. அருளி, யவ்வை வாழ்விக்கும்’ எனவும், 'மற்று அதுவே அங்கு ஆசு இல் உருவமும் ஆம்' எனவும், இரு தொடராக இயைத்துப் பொருள்கொள்க. அது என்றது, அத்திருவருளே. இனி, 'அது' என்னும் சுட்டு யகாரமாகிய ஆன்மாவைச் சுட்டியதாகக்கொண்டு, 'வகாரமாகிய அருள், சிகாரமாகிய சிவத்தை ஆன்மாவிற்குக் கொடுத்து மேலாகிய பரமசுகத்தை விளேயா நிற்கும். அந்த ஆன்மா, குற்றமில்லாத திருமேனியாம் அந்தச் சிவத்திற்கு" எனப் பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர். -“நண்ணி, அருளானது சிவத்தை ஆக்கும் அணுவை இருளானது திர இன்று' - (உண்மை விளக்கம்-42) எனவரும் உண்மை விளக்கத்தொடரும், வாசியை யருளும் மாயா மற்றது பற்ற உற்று அங்கு ஈசனில் ஏகமாகும் ?? (சிவப்பிரகாசம்-92) எனவரும் சிவப்பிரகாசத் தொடரும் ஒப்பு நோக்கத் தக்கன வாகும். - - " பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வாேதன் பாதத்திறம் ?? (திருவாசகம்-திருவெம்பாவை.14)