பக்கம்:திருவருட் பயன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தேசிகரும், ஆசாரியாருடைய அருளினலே’ எனச் சிந்தன யுரையாசிரியரும் பொருள் கூறினர். வாசி இடை நிற்றலா வது அருளுக்கும் சிவத்திற்கும் நடுவே நிற்றல்; ‘சிவயசிவ' எனச் சிந்தித்து ஒன்றுபடுதல். உடையாள் உன்ற ன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதால்ை அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளேப் புரியாய் பொன்னம் பலத்தெம் முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே ’ (திருவாசகம் கோயில் மூத்த-1 எனவரும் திருப்பாடலுக்கு “சத்தியும் சிவமும் ஒத்திரு பாலுற முத்தியாகும் முறைமை அருளிய உண்மை'யை அறிவுறுத்துவ தாகச் சீகாழித் தாண்டவராயர் கூறும் குறிப்பு, வாசி இடை நிற்கும் இவ்வழக்கினே இனிது புலப்படுத்தும் முறைமையில் அமைந்திருத்தல் உணர்ந்து போற்றத் தகுவதாகும். இவ்வாறு திருவைந்தெழுத்தினே நகர முதலாகவும், சிகரம் முதலாகவும், வாசியிடை நிற்பதாகவும், மூவகையாக வகுத்துச் சொல்வான் ஏன்? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்து வதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும். 90. எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று கில்லா வகையை நினைந்து. இ-ள்: எவ்வகைப்பட்ட உபாயங்களையும் மால் களுாைக்கும்; இவ்வாறு ஆன்மாவானவன் சிவசத்தியினை நீங்கி கில்லாதடய்ை கிற்கும் திறத்தினக் கருதி என்க.