பக்கம்:திருவருட் பயன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 ஆன்மாவை ஒருகாலத்தும் விட்டு நீங்காமல் அதிையே மறைத் துள்ள அறியாமையாகிய ஆணவ இருள் விட்டுநீங்கத்தக்க தாக உயிர்களின் உள்ளத்திலே பேரொளியாய் விரிந்து பரவி மேலிட்ட சிவஞானத்தினை ஓங்குணர்வு’ எனக் குறித்தார். அத்தகைய சிவஞானமாகிய பேரறிவுக்குள்ளே அடங்கித் தற்போதம் சீவியாமல் நிற்றல் சிவன் முத்தரது இயல்பென் பார், ஒங்குணர்வின் உள் அடங்கி என்றர். சிவஞானம் பதிந்த சீவன் முத்தராயுள்ளவர்கள் தங்கள் உள்ளத்திலே சிவனேத் தியானிக்குமிடத்துச் சிவன் அங்கே பதிந்து நிற்கை யால் தங்களிடத்திலே பேரின்பம் விளையுமாறு நிற்பாச்க ளென்பார், 'உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்' என் றர். மற்றுச்சொல் ஏதுண்டு’ என இயையும். சித்தியாரில், இந்தனத்தி னெரிபாலின் நெய்பழத்தின் இரதம் எள்ளின்கணெண்ணெயும்போல் எங்குமுளன் இறைவன் வந்தனசெய் தெவ்விடத்தும் வழிபடவே அருளும் மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞானத்தால் சிந்தனேசெய் தர்ச்சிக்கச் சிவன் உளத்தே தோன்றித் தீ இரும்பைச் செய்வதுபோல் சிவன் தன்னைப் பந்தனேயை அறுத்துத்தா னுக்கித்தன் உருவப் பரப்பெல்லாம் கொடு போந்து பதிப்பணிவன் பாலே ’’ . (சித்தியார் சுபக்கம்-303) என்றதும், திருச்சிற்றம்பலக் கோவையாரில், "நினேவித்துத் தன்னே என் நெஞ்சத்திருந்து அம்பலத்து நின்று புனேவித்த ஈசன்’ (140) என்றதும் இப் பொருள்பற்றி அமைந்தன. தூங்குதல் = மயக்க விகற்பங்களில் படாமல் உறங்காது உறங்கி இருத்தல்; என்றது, புண்ணிய பாவங்களேப்பயக்கும் விருப்பு வெறுப்புக்களாய்ப் பொருந்தும் கன்மமும், மண்முதல் மாயா தத்துவம் ஈருய்க் காணப்படுகின்ற மாயையும், சுட்டி யறிவதாகிய விபரீதவுணர்வைப்பயக்கும் ஆணவமும் ஆகிய