பக்கம்:திருவருட் பயன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

இவர், சிறந்த செந்தமிழ்க் காப்பியங்களை இயற்றிய பெரும் புலவராகவும் திகழ்கின்றார். இவரால் இயற்றப்பெற்ற செய்யுள் நூல்கள் சேதுபுராணம், திருப்பரங்கிரிப் புராணம், திருவையாற்றுப்புராணம் என்பனவாகும்.

நிரம்ப அழகியராகிய இப்புலவர்பெருமான். தம் பெயருக்கேற்பச் சொற்பொருள் நயங்களால் நிரம்ப அழகிய செய்யுட்களைப் பாடவல்லவர் என்பது இவர் இயற்றியனவாக மேற் குறித்த புராணங்களைப் பயில்வார்க்கு இனிது விளங்கும். திருப்பரங்கிரிப் புராணத்தில் கற்பக விநாயகரைப் பரவிப் போற்றுவதாக அமைந்தது,

வஞ்சகத்தி லொன்றானைத் துதிக்கைமிகத் திரண்டானை
வணங்கா ருள்ளே
அஞ்சரண மூன்றானை மறைசொலுநால் வாயானை
யத்த னாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானைச் சென்னியணி யாரறானைத்
துகளெ ழானைச்
செஞ்சொன்மறைக் கெட்டானைப் பரங்கிரிவாழ்
கற்பகத்தைச் சிந்தை செய்வாம்.

எனவரும் பாடலாகும். இதன்கண் ஒன்றுமுதல் எட்டுவரை யிலுள்ள எண்களைச் சிலேடைப் பொருளமைய இந் நூலாசிரியர் அமைத்துள்ள நயம் உணர்ந்து மகிழத் தக்கதாகும். இவர் இலக்கண நுட்பங்களைச் செய்யுளிற் சுவை பெற அமைத்துப் பாடுதலில் வல்லவர். செல்வமுண்டாக்கும் என்னும் கருத்தினை,

"வெறுங்கையர் என்னும் சொல்லின்
 மென்மையை வன்மையாக்கும்"

என்ற தொடரால் அழகாகப் புலப்படுத்தியுள்ளார். வெறுங்கையர் என்ற சொல், தம்கையில் ஒன்றுமில்லாதார் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/20&oldid=513151" இலிருந்து மீள்விக்கப்பட்டது