பக்கம்:திருவருட் பயன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அற என்பது, மிக என்பது போலக் குறிப்பு மொழியாய் நின்றது. சீவன்முத்தர் சிவம் ஒன்றுமேயன்றிப் பிறிதொன். மறியார் ஆகவே, பாமுத்தரும் அவ்வாருதல் கூறவேண்டாவாருயிற்று. இகளுல், அவர் பிறிதொன்றம் அறியாது எவ் விடத்தும் சிவமே கண்டிருத்தல் கூறப்பட்டது. “t as ஞானத்தால் (சித்தியார் சுபக்கம் 311) என்பதனுள், சீவன் முத்தர் பரமே பார்த்திருப்பார்” என்றருளிச் செய்தவாறு காண்க. விளக்கம்: சிவபரம்பொருளே அடைந்தோர் அம் முதல்வனே அன்றி வேறென்றையும் அறியச்செய்யார் என்பது உணர்த்துகின்றது. - எல்லாம் அறியும் அறிவு-இயல்பினுல் முழுவதும் உணரும் சிவஞானம். - உறுதல்-வெளிப்படுதல்; பொருந்துதல், ஈங்கிவர் என்றது.இவ்வுலகில் உடம்போடு கூடியுள்ள பொழுதே பாசத்தைவிட்டு நீங்கிப் பசு கரணங்களெல்லாம் பதி கரணங்களாகப்பெற்ற சீவன் முத்தர்களே. ஒன்று அல்லாது அற அறியார்:- ஏகம்’ எனப்படும் சிவபரம்பொருளேயன்றி வேறென்றையும் சிறிதும் அறிதலைச் செய்யமாட்டார்கள். . ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன்.ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங் கையாற் காளாம் அது. (அற்புதத்திருவந்தாதி-11) எனக் காரைக்காலம்மையாரும்,