பக்கம்:திருவருட் பயன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முற்றும்மை வருவித்துரைக்கப்பட்டது. ஆங்கு-அவ்வாறே. “அவனும் இவன் என்றது, சிவத்தோடுங் கூடிச் சிவமாய் நிற்கும் ஆன்மாவை. ஆன்மா தத்துவம் முப்பத்தாருேடும் கூடி நிற்கும் நிலையிலேயே அத் தத்துவங்களோடும் கூடி ஒன்றுபட்டு நிற்பதும் செய்யாமல், வேறுபட்டுப் பிரிந்து அறிவு கெடுவதுஞ் செய்யாமல் நின்ற இடம், சாக்கிராதிதம் என்பர். சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் சர்வசங்க நிவர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகர்வது என் இம்மையிலே உயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்ருே ' (சித்தியார்-சுபக்) எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தம் சிவமாந் தன்மையராகிய செம்புலச் செல்வர்களது இயல்பினை விரித் துரைப்பதாகும். ஆன்மா சிவத்தோடுங் கூடிச் சிவமாய் திற்கும் என்பது, - " அவமாய தேவர் அவகதியி லழுந்தாமே - பவமாயங் கெடுத்தென்னே ஆண்டு கொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து சிவமான வாயாடித் தெள்ளேணங் கொட்டாமோ ” (திருவாசகம்) என அறிவினுற் சிவனேயாகிய மணிவாசகப் பெருமான் அரு ளிச்செய்தலால் இனிது புலம்ை. சிவமாதல் என்றது, ஆன்மா தற்போதமாய் நிற்பதுஞ் செய்யாமல் தானென்கிறமுதல் கெடு வதுஞ் செய்யாமல் தற்போதங்கெட்டு அந்தச் சிவத்தொடுங் கூடி இரண்டற நின்று அனுபவித்தல். அவனும் இவன்’ என்புழி ஆக்கச்சொல், சிவனும் ஆன்மாவும் கலப்பில்ை ஒன்ருகியபோதும் பொருட்டன்மையால் வேருதலைப் புலம் படுத்துவதாகும். இந்நுட்பத்தினே,