பக்கம்:திருவருட் பயன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 எனக் கண்ணிர்மல்கி நாட்டியத்தான்குடி நம்பியை உளமுருகிப் போற்றியுள்ளமையும், ' நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்விடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே ’’ (திருமந்திரம்-85) எனத்திருமூலர் தாம்பெற்ற பெருநல்ததினே யாவரும் பெறு தற்குரிய உபாயத்தினை அறிவுறுத்தியருளினமையும், ஐம் புலன் கையிகந்து சிவபரம்பொருளைச் சிந்திக்கும் செம்புலச் செல்வராகிய சிவஞானிகள், பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நல்லருளாளராய் அறவாழியந்தணகிைய இறைவனே இடைவிடாது போற்றிப் பரவுதலேயே தம்மியல் பாகக் கொண்டு விளங்குவார்கள் என்பதனை நன்கு புலப் படுத்துவனவாகும். குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியார் நறைமலர்த்தாட் கன்புசெய்வாம் நாம், சிற்றம் பலவன் திருவடிகள் பூசிக்கப் பெற்ற பெருஞ்செல்வப் பேறுடையார்-கொற்றங் குடியார் உமாபதி,சீர் கூறும் அடியார் அடியென் தலைமே லன. திருவருட்பயன் மூலமும், நிரம்ப அழகிய தேசிகர் உரையும். திரு க. வெள்ளைவாரணனர் எழுதிய உரை விளக்கமும் முற்றும். திருச்சிற்றம்பலம்.