பக்கம்:திருவருட் பயன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம்

கொற்றவன்குடி - உமாபதி சிவாசாரியார்

அருளிச்செய்த

திருவருட்பயன்

நிரம்ப வழகிய தேசிகர் உரை

சிறப்புப்பாயிரம்

காப்பு

     நேசத்தடியர் நினைந்துருகி நின்றிட்ட
     வாசத் தளைகடக்க மாட்டாது - பாசத்
     திருகோட்டு முக்கட் சிவபெருமா னீந்த
     ஒருகோட்டு நால்வா யுவா.

நேரிசையாசிரியப்பா

     திருமகள் பிறந்த விரிதிரைப் பாற்கடற்
     சூறையங் கடுங்காற் சுழுற்றுபு வெடுப்ப
     வலைவ தறவெழுந் தண்டமீப் படர்ந்து
     நிலைபெற நின்ற நெடுந்திர ளன்ன
     வின்னல் தீர் இன்ப நன்னலஞ் சுரத்தலின்
     விளங்கெழிற் றருமந் திரண்டுவீற் றிருந்த
     வண்ணமும் போலும் அண்ணல்தன் கயிலை
     காவலிற் புரக்குங் கண்ணுதற் கடவுள்
     நந்திதாள் சுமந்துவந் தவ்வழித் தோன்றம்
     பெண்ணையா றுடுத்த வெண்ணெய் நின்றுருத்த
     தொண்டர்க ளிதய முண்டக மலர்த்தும்
     விஞ்சைவா ளிரவி மெய்கண்ட தேவன்
     மறையகத் தடக்கிய வொருதனிக் குடிலையும்
     அருள்நூல் நிறைந்த பொருண்முழு துணர்த்தும்
     ஆடி போலக் கூடிய காட்சியிற்
     புகல்சிவ ஞான போதநூல் தொகுத்த
     அகல்பொருள் தேர்தற் கருமையும் ஆங்கவன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/22&oldid=513158" இலிருந்து மீள்விக்கப்பட்டது