பக்கம்:திருவருட் பயன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

“ஆருமறியார் அகாரமவனென்று' (திருமந்திரம்-1751) எனவும், "அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும்’ (அ-1753)

எனவும் திருமூலநாயனாரும் பொன்னேபோல் போற்றியுள்ளமை காணலாம்.

'வேதத்துள், அத்துவிதம் என்றதுமன்றி, ஏகம் எனவும் ஒற்றுமைப்பட ஒதுதலால், அதற்கு மாறக உயிர்கள் பல என்றும் இறைவன் அவற்றுடன் ஒன்றி நிற்கின்றர் என்றும் வேறுபடக் கூறுவதென்னை? என்னும் தடையினை நிகழ்த்திக் கொண்டு அதற்கு விடைகூறும் நிலையில்,

    "ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றேபதி பசுவாம்
     ஒன்றென்ற நீ பாசத்தோடுளை காண்-ஒன்றின்றால்
     அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல்
     இக்கிரமத் தென்னும் இருக்கு"

என மெய்கண்டதேவரும்,

"ஒன்றென மறைகளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவதென்னை யென்னின் அன்றவை பதிதான் ஒன்றென் றறையும் அக்கரங்கள் தோறும் சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனும் சேர்ந்தே" என அருணந்திசிவனாரும் கூறும் விளக்கங்கள், இத்திருக்குறட் பொருளை அடியொற்றி அமைந்தனவாகும்.

'அகரமுதல் எழுத்தெல்லாம்' என்னும் திருக்குறளையும் அதனையடியொற்றி யமைந்தனவாக இங்கெடுத்துக்காட்டிய சாத்திர தோத்திரங்களையும் தழுவியமைந்தது, இத்திருவருட் பயனின் முதற்குறளாகும். அகரம் நாத மாத்திரையான் இயற்கைத் தோற்றமுடைத்தாய் நிறைந்து முதன்மையுற்று நிற்ப, ஏனை எழுத்துக்களெல்லாம் அவ் அகரத்தின் இயக்கத்தான் விகார முயற்சியிற்றோன்றி அகரத்தால் வியாபிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/29&oldid=513309" இலிருந்து மீள்விக்கப்பட்டது