பக்கம்:திருவருட் பயன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வனுக்கும் உவமை. இம்முதற்குறளால் சிவனுக்குத் தன்னியல்பாகிய சொரூபவிலக்கணம் இதுவெனவுணர்த்தினாயிற்று.

இவ்வாறு இறைவன் உயிர்களின் மனமொழி மெய்களுக்கு எட்டாத நிலையில் அறிவே வடிவாய் அப்பாற்பட்டு நிற்பானாயின், உயிர்கள் அவனை வழிபட்டு மலமாசு நீங்கி வீடுபெறுவது எவ்வாறு என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயநீங்க அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

     2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
        பின்னமிலான் எங்கள் பிரான்.

இ-ள் : வாக்கு மனங்கட்கு எட்டாத தனது விமல ஆனந்த வீட்டின் எல்லையை நிலைபெற்ற ஆன்மாக்கள் வந்து பொருந்தும்படி செய்யும் அருளாகிய பராசத்தியுடனே பேதமின்றி ஒன்றி நிற்பான் எம்முடைய இறைவன் என்க.

மன்னுயிர்கள் என்றதனால், ஆன்மாக்கள் வினைவயத்தில் உருவுந் தொழிலும் வேறுபடுவதன்றி, நிலமுதல் நாதமீறாகிய தத்துவங்கள்போலப் பிறத்திறப்பன அல்லவாம்.

இதனால், அவன் ஓர் சத்தியோடும் கூடிநிற்பன் என்பதாம், அது, கருணவடிவிற்றென்பதூஉம் கூறப்பட்டன.

விளக்கம் : இது, மேற்குறித்தவாறு அருவமும் அல்லாமல் உருவமும் அல்லாமல் இருக்கிற இறைவன், தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் ஐந்தொழில் நிகழ்த்தி மன்னுயிர்கட்கு அருள் வழங்குமாறு உணர்த்துகின்றது. தன்னிலைமையாவது, மாற்றமனங்கழிய நின்ற இறைவறனாகிய தனது ஈறிலாப் பேரின்ப நிலையாகிய வீடுபேறு. உயிர்கள் என்றும் அழிவில்லாதன என்றார், மன்னுயிர்கள் என்றார். மன்னுதல்-நிலைபெறுதல். மன்னுயிர்கள் தன்னிலைமை சாரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/31&oldid=513355" இலிருந்து மீள்விக்கப்பட்டது