பக்கம்:திருவருட் பயன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



9

சத்தி தரும் எனவும், (அந்தச்) சத்தியொடு பின்னமிலான் எங்கள் பிரான் எனவும் இரு தொடராக இயையும். இடை நின்ற சத்தி என்னும் சொல் முன்னும் பின்னும் சென்றியை தலின், இது தாப்பிசைப் பொருள்கோள். பின்னமிலான் வேறுபடப்பிரிதலில்லாதான். இறைவனை ஆதிபகவன் என்ற பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார். ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர் ஆதியாய பகவன் என விரியும்; முதற்கடவுள் என்பது இதன்பொருளாகும். இனி , ஆதிபகவன் என்றதொடர்க்கு ஆதிசத்தியொடுகூடிப்பிரிவின்றி யுள்ளானாகிய சிவன் எனச் சிவநெறிச்செல்வர் பொருள்கொள்வர். அநாதிமுத்த சித்துருவாகிய முதல்வன். ஒன்றினுந் தோய்வின்றித் தானே சொயம்பிரகாசமாய் நிற்குந் தன்னுண்மையிற் சிவம் எனவும், உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின்வழி நிற்குந்தன்மையிற் சத்தி எனவும் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கிநிறல்பற்றி இறைவனை ஆதிபகவன் என்ற பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக்கொள்ளுதல் பொருந்தும்.

     'சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்’ (1-115-4)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தொடர் திருவள்ளுவர் கூறிய 'ஆதிபகவன்' என்ற திருப்பெயர்க்குரிய விளக்கமாக அமைந்திருத்தல் இக்கருத்தினை வலியுறுத்துதல் காணலாம். சத்தி பின்னமிலான் எங்கள்பிரான் என்னும் இத்திருவருட் பயனும் 'ஆதிபகவன்' என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற் பாலதாகும். இறைவன், சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து மறைத்து அழித்து அருள்புரிகின்றான் என்பது,

    'தன்னிற் பிரிவிலா எங்கோமான்' (திருவெம்பாவை)
     எனவும்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/32&oldid=514312" இலிருந்து மீள்விக்கப்பட்டது