பக்கம்:திருவருட் பயன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

       "உருவமும் உயிருமாகி ஒதியவுலகுக்கெல்லாம்
       பெருவினை பிறப்பு வீடாய்நின்ற எம்பெருமான்"(4-63-3)
  எனவும்,
       "அண்டமா ரிருளூடு கடந்தும்பர் -
        உண்டுபோலுமொ ரொண்சுடர்" (5-97-2)
  எனவும்,
       "சுடர்விட்டுளன் எங்கள்சோதி” (3–54-5)
  எனவும்,
       'எந்தையாரவர் எவ்வகையார்கொலோ’ (3-54-3)
  எனவும் 

வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்புநோக்கியுணரத்தக்கனவாகும்.

மூவகைத் திருமேனிகளையும் உடையான் எனவே, இத் திருமேனிகளை இவனுக்குக் கொடுத்தற்கு இவனுக்கு மேலும் ஒரு தலைவன் உளனோ? என ஐயுற்ற மாணாக்கர்க்கு ஐயம் நீங்க அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாம்.

      6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
         இல்லாதான் எங்கள் இறை.

இ-ள் : நிறைந்து நின்ற எண்ணிறந்த ஆன்மாக்களும் அறிவிக்க அறியும் பகுதிபோலத் தனக்கு மேலாய் கின்று உணர்த்துவதோர் கடவுளை யில்லாதான் எம்முடைய இறைவன் என்க.

இதனாற் கடவுட்டன்மை ஒருவராற் பெறாது இயல்பாகவுடையன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/40&oldid=514382" இலிருந்து மீள்விக்கப்பட்டது