பக்கம்:திருவருட் பயன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20



     "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
      நெறிநின்றர் நீடுவாழ் வார்"(6)

எனவரும் திருக்குறட் பொருளைத் தன்னகத்தே கொண்டு நிற்றல் அறியத்தக்கதாகும்.

     "அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்
      புலனுமடக்கி ஞானப்புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
      துள்ளிருக்கும் புராணர்"

என ஆளுடையபிள்ளையாரும்,

    'தொடர்ந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனை’
    'கருதுவா ரிதயத்துக் கமலத்தூறுந் தேனவன்காண்
    'காண்டற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்காற்ற
     வெளியான் கண்டாய்'
    ‘‘மனந்திருந்தும் மழபாடி வயிரத்தூணே’’

என ஆளுடைய அரசரும், -

    'திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா’’

என ஆளுடைய நம்பியும்,

    'அடியாருள்ளத் தன்பு மீதுரக்
     குடியாக்கொண்ட கொள்கையும் சிறப்பும்’
    'வான நாடரும் அறியொனத நீ
     .......................................
     என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா’ 

என ஆளுடைய அடிகளும் அருளிய திருமுறைத் தொடர் களையுளங்கொண்டு இறைவனது அருமையில் எளிய அழகினை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, இத்திருவருட்பவனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/43&oldid=514401" இலிருந்து மீள்விக்கப்பட்டது