பக்கம்:திருவருட் பயன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



25

       "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
        சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச்-சார்ந்தடியார்
        தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் 
        ஆய்ந்தார்முற் செய்வினையும் ஆங்கு"
                                (சிவஞானபோதம், வெண்பாட5)

எனவரும் மெய்கண்டார் வாய்மொழியும் இத்திருவருட்பயனோடு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும்.

இங்ஙனம் வேண்டுதல் வேண்டாமையிலானாய் வெளிப்படாதுள்ள இறைவனை விரும்பி வழிபட்டால் எளிவந்து அருள்செய்வானோ என வினவிய மாணாக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும்.

    10. உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது
        மன்னுபவங் தீர்க்கும் மருந்து.

இ-ன்:- ஞானமாய்ப் பிரிப்பின்றி நின்று அனாதியே தொடர்ந்துவரும் பிறவிப்பிணியினை அறுத்தற்கு ஒர் மருந்தான தன்மையினையுடையன் அக்கடவுள்; அதற்கு ஓர் ஐயமில்லை. அதனை எஞ்ஞான்றும் இடைவிடாது அன்புடன் நினைப்பீராக என்க.

இதனால், பதியினை வழிபட வேண்டுமென்பதும் உறுதிப்பாடுங் கூறப்பட்டன.

விளக்கம்:- உயிர்க்குயிராய் நின்றருளும் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பார்க்குப் பிறவியறும் என்பது உணர்த்துகின்றது.

'உணர்வாய் ஒவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து உளது; ஐயம் இலது உன்னும்' என இயைத்துப்பொருள் கொள்க. உன்னும் - (இடைவிடாது) நினைப்பீராக. உளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/48&oldid=514438" இலிருந்து மீள்விக்கப்பட்டது