பக்கம்:திருவருட் பயன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

என வரும் திருக்குறளை அடியொற்றியமைந்ததாகும், இரு வகைப்பற்றினையும் விட்டாரது பெருமையை எண்ணாற்கூறியறியலுறின் அளவுபடாமையான் இவ்வுலகத்துப் பிறந்திறந்தார் இத்துணையர் என கூறியலுற்றாற்போலும். முடியாதென்பதாம் என இதற்குப் பொருள் கூறுவர் பரிமேலழகர். இத் திருக்குறளில் துறந்தார் என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றினையும் விட்டொழித்து வீடுபேற்றின்பத்தினைப் பெற்ற நல்லுயிர்களை. பெருமை-மிகுதி. வையத்து இறந்தார் என்றது, இப்பிறப்பிற் பற்று நீங்காது மீளவும் இவ்வுலகத்திற் பிறந்து வீடுபெறும் நோக்கத்துடன் இரு வகைப்பற்றும் நீங்கத் துறவினை மேற்கொள்ளவேண்டிய பாசப்பிணிப்புடைய உயிர்களை துறந்தார், வையத்து இறந்தார் எனத் திருவள்ளுவர் பகுத்துரைத்த இருவகைவுயிர்களையும் இந்நூலாசிரியராகிய உமாபதிதேவர், துறந்தார், துறப்போர் என முறையே குறித்துள்ளமை இங்கு கூர்ந்துணரற் பாலதாகும்.

ஆன்மாக்களை இலக்கத்தினால் அளவுபடுத்தற்கு அரிதென்றது ஏதென்னில் ஒவ்வொரு யோனிவர்க்கங்கள்தோறும் உண்டான ஆன்மாக்களை அளவுபடுத்தப்படாதது கொண்டே எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதத்திலுண்டான ஆன்மாக்களையும் அளவுபடுத்தப்படாதபடியாலும், அன்றியும் அவதரந்தோறுந் திருவடியிலே கூடின ஆன்மாக்கள் ஐநநங்களில் வாராதிருக்கவும் பிரபஞ்சம் காரியப்பட்டு வருகிற ஆன்மவர்க்கம் தொலையாதது கொண்டும் அப்படிச் சொன்னதென அறிக. இதற்குப் பிரமாணம், கோயிற் புரானத்தில் "எத்தகைய போகங்க ளெவற்றினுக்குங் காரணமாய் வைத்தபடி இடம்போதா வகைநெருங்கு மன்னுயிர்கள்" எனவும், "கற்பகங்கள்தொறும் நடஞ்செய் கழலடைந்தோர் கணிப்பிலரால்" (22) எனவும் வருமது கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/53&oldid=514445" இலிருந்து மீள்விக்கப்பட்டது