பக்கம்:திருவருட் பயன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

கொள்க" (சிவப்பிரகாசம். 19. உரை) என மதுரைச்சிவப்பிரகாசர் கூறும் விளக்கம் இங்கு ஒப்புநோக்கத்தகுவதாகும் (1)

உயிர்கள் எண்ணிலவாயின் அவற்றின் இயல்புவிளங்க அவற்றைச் சில வகையுட்பட அடக்கிக் கூறுதல் இயலுமோ என வினவிய மாணாக்கர்க்கு அவ்வுயிர்களை மூவகைப்படுத்துணர்த்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

         12. திரிமலத்தார் ஒன்றதனிற் சென்ருர்கள் அன்றி
             ஒருமலத்தார் ஆயும் உளர்.

இ-ள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்கள் மூன்றுடையராகியும், இம்மூன்றில் மாயை நீங்கி ஏனைய இாண்டும் உடையராகியும், அவ்விருவகையுமல்லாது ஆணவம் ஒன்றினையும் உடையாராகியும், சொல்லப்பட்ட மூன்று திறத்தினையுடையார் அவ் ஆன்மாக்கள் என்க.

ஆயும் என்பது மூன்றிடத்தும் கூட்டப்பட்டது. அவர்கள் நிரனிறையிற் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலராம். "உரைதரும் இப்பசுவர்க்கம் உணரின் முன்றாம் உயரும் விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர்-நிரையின் மலம், மலங் கன்மம், மலங்கன்ம மாயை நிற்கும்" (சிவஞானசித்தி-சுபக் 254) என்று அருளிச்செய்தவாறு காண்க.

இதனால், தொடர்பின் விகற்பத்தால் உயிர்கள் மூவகைப் பட்டமை கூறப்பட்டது.

விளக்கம் : உயிர்கள் மூவகைப்படும் முறைமையினை உணர்த்துகின்றது.

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் உடைய உயிர்கள் சகலர் என்றும், அவற்றுள் மாயாமலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/54&oldid=514466" இலிருந்து மீள்விக்கப்பட்டது