பக்கம்:திருவருட் பயன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

மாயை யென்னும் துணையினையுடைய சகலர் தாங்கள் கட்டுற்றவனென்னுந் தன்மை தமக்குத் தெரிதல் இலர்.

எனவே ஏனையர் இருவருக்குக் தெரியும் என்பதாம். மலம் என்பது அழுக்கு உம்மை, முற்று.

இதனால் முன்னர் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டது, மாயையுங் கன்மமும் அல்லது ஆணவம் அன்றென்பது கூறப்பட்டது.

விளக்கம்: மேற்குறித்த மூவகை உயிர்களும் தோன்றாத் துணையாயுள்ள முதல்வன் ஒருவனுக்கே அடிமையாவனன்றி அவைதம்முள் ஒன்றற்கு ஒன்று அடிமையாவன் அல்ல என்பது உணர்த்துகின்றது.

'தொத்து’ என்பதற்கு மாயைத் தொடர்பு எனப் பொருள்கொண்டு, தொத்து துணையுள்ளார்-மாயையென்னுந் துணையினையுடைய சகலர்.தோன்றலர் (தாங்கள் கட்டுற்றவர் என்னும் தன்மை) தமக்குத்தெரிதல் இலர்’ எனப்பொருள் வரைந்தார் நிரம்ப அழகிய தேசிகர். இவ்வாறன்றி, "துணை தோன்றலர் தொத்து உள்ளார்" என இயைத்து, மூவகைப்பட்ட ஆன்மாக்களும் ஆணவமலத்தினையுடையவர்கள் தோன்றாத்துணையாயிருக்கிற கர்த்தாவுக்குத் தொத்தடிமை; ஒருத்தருக்கொருத்தர் அடிமையல்ல" எனப்பொருளுரைத்தார் சிந்தனையுரையாசிரியர். துணை தோன்றலர் என்றது, உயிர்கட்குத் தோன்றாத் துணையாய் நின்று அருள்புரியும் இறைவனை, தொத்து உள்ளார்-கொத்து அடிமையாக உள்ளவர்கள். தொத்து கொத்து ஈண்டு ஒருசேர அடிமைப் பட்டுள்ள தன்மையினைச் சுட்டி நின்றது. இனி, தோன்றலர் என்ற சொல்லே தோன்றாத்துணையாய் நின்ற இறைவனைக் குறிக்குமாதலால், பின்வந்த துணை என்ற சொல்லுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/56&oldid=514468" இலிருந்து மீள்விக்கப்பட்டது