பக்கம்:திருவருட் பயன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

இ-ள் : இருள் வந்து இறுத்தகாலை மறைந்தும், ஒளிவந்து இறுத்தகாலை விளங்கியும் நிற்கும் பொருள்களை யுடையதன்றோ உலகம் என்க.

பொருள்கள் என்ற பன்மையால், அவை கண்னும் ஆடியும் விண்ணும் முதலாயின. ஒகாரம் எதிர்மறை, இதுவும் ஒட்டென்பதோர் அலங்காரம்.

இதனால், சுத்தவுணர்வும் சடமும் அன்றி இடைப்பட்டதொன்று இல்லையென்பாரை, உண்டென மறுத்து, மேலது வலியுறுத்தப்பட்டது.

விளக்கம் : சதசத்தாகிய உயிரைப்போலவே தன் தன்மையதின்றிச் சார்ந்ததன் தன்மையனவாயுள்ள பொருள்கள் இவ்வுலகில் வேறு உள்ளன என்பது உணர்த்துகின்றது.

இருளில் இருள் ஆதல்-இருளுடன் கூடி அதுவாய் மறைதல், எல்-ஒளி. எல்லிடத்தில் எல் ஆதல்-ஒளியுடன் கூடித் தன்தன்மை விளங்கித் தோன்றுதல். இருள் ஆகி, எல் ஆம் பொருள்களைப் புவி(பெற்று) இலதோ என உருபும் வினையும் விரித்துரைக்க. இலதோ என்புழி ஒகாரம் உளது என எதிர்மறைப் பொருள் தந்து நின்றது. இருளுடன் கூடி இருளாகியும் ஒளியுடன் கூடி ஒளியாகியும் இங்ஙனம் சார்ந்ததன் வண்ணமாந் தன்மைக்கு இவ்வுலகில் கண், படிகம், ஆகாசம் என்பவற்றை உவமையாக எடுத்துக் காட்டுவர் சான்றோர். நிரம்ப அழகிய தேசிகர் உரையில் ஆடி என்றது. படிகத்தினை. விண்-ஆகாசம். ஆணவ இருளோடுகூடி அறியாமையுற்றும் சிவஞானமாகிய ஒளியுடன் கூடி நல்லுணர்வு விளங்கியும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது ஆன்மா' என்னும் பொருள் தோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/66&oldid=514491" இலிருந்து மீள்விக்கப்பட்டது