பக்கம்:திருவருட் பயன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

சிவப்பிரகாசத் தொடருக்கு அமைந்த விரிவுரை போன்று திருவருட்பயனின் மூன்றாமதிகாரமாகிய இப்பகுதி அமைந்துள்ளமை ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும்.

இவ்வதிகாரத்தின முதற்குறள், ஆணவமலத்துண்மை யினை அறிவுறுத்துவதாகும்.

துன்றுதல்-நெருங்கிச்செறிதல்; தொன்றுதொட்டு இடைவிடாது தொடர்தல். பவத்துயர்-பிறவித்துன்பம். இன்பு - அத்துன்பம் நீங்கியவழி யுளதாம் பேரின்பம். துணைப் பொருள்-உயிர்கட்குத் தோன்றாத்துணையாய் நின்று அருள் புரியும் மெய்ப்பொருளாகிய கடவுள். துணைப்பொருள் என்பதற்கு இவற்றைக்கூட்டி முடிப்பதாய முதல் துணை நிமித்தங்கள்' என்றும், இன்றென்பது என்பதற்கு இல்லையென்று அறுதியிட்டுக்கூறுதல் என்றும், எவ்வாறும் இல் என்பதற்குக் காண்டல் முதலிய அளவைகள் எல்லாவற்றானும் இல்லை' என்றும் நிரம்ப அழகிய தேசிகர் பொருள் வரைந்துள்ளார். துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும், இன்று எவ்வாறும் இல் என்பது (இருள்) என இயைத்து, 'நெருங்கிவாராநின்ற சனன மரணத் துக்கத்தையும், அது நீங்கினவிடத்துண்டான சுகத்தையும் இப்போது உண்டென்பதையெல்லாம் எந்த முறைமையினாலும் ஆணவமலமானது இல்லையெனப்பண்ணிக்கொண்டு நிற்கும் என எடுத்துக் கொண்ட அதிகாரத்துக்கு இயைபப் பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர். நல்லவையெல்லாம் (திருக்குறள்-375) என்புழிப்போல ஈண்டு இருள் என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. இனி துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப் பொருளும் (ஆகிய உள்பொருள்களை யெல்லாம் அறியாமை யால்) இல்லையெனச் சொல்லுதற்கு (இருள்மலத்தை யன்றிப் பிறிது காரணம் இல்லை என இக்குறட்பாவுக்குச் சொற்கிடக்கை முறையே பொருளுரைப்பினும் அமையும், இங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/74&oldid=514770" இலிருந்து மீள்விக்கப்பட்டது