பக்கம்:திருவருட் பயன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



55

ஆணவம் எனப்படும் இவ்விருள்மலம் ஆதியோ அணாதியோ எனவினவிய மாணாக்கர்க்கு அஃது அனாதியாதலை விளக்குவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

    24. அன்றளவி யுள்ளொளியொ டாவி யிடைபடங்கி
        இன்றளவு நின்ற திருள்.

இ-ள் : அக விளக்காகிய ஞானத்தினோடே தானும் அனாதியே கலந்துகொண்டு, அந்த ஞானத்தின்மேற் படராது உயிரளவிலே அமைவுற்று, இதுநாள் வரையும் நீங்காது நின்றது ஆணவமாகிய அந்தகாரம் என்க.

உள்ளொளியோடென்பது, உயர்வின் கண் வந்தது; ஒருவினையொடுச்சொ லுயர்பின் வழித்தே (தொல்- 57 5) என்பது இலக்கணமாதலின்.

இதனால், ஆணவமாகிய அந்தகாரம் அனாதியென்பதூஉம், மாயை கன்மம் போல நீங்கிப் புணர்ந்ததன்றென்பதூஉம கூறப்பட்டன.

விளக்கம்: இருள்மலமாகிய ஆணவம் அனாதியே உயிரைப்பிணித்துள்ளது என்பது உணர்த்துகின்றது.

உள்ளொளியோடு அன்று அளவி ஆவியிடை அடங்கி இன்றளவும் நின்றது இருள்' என இயைத்துரைக்க, உள்ளொளி, ஆவியிடை அன்று அளவி நிற்றல்போல் ஆவியிடை அன்று அளவி இன்றளவும் இருள் நின்றது என்க. உயர்ந்த ஒளியினைச்சார்த்தி இருளினை யுடன் கூறினராதலின் ஒடு வுருபு உயர்பின் வழித்தாயிற்று. அன்று-அனாதியே. அளவுதல் -

கலத்தல். உள்ளொளி-அகவிளக்காகிய ஞானம்; என்றது, உயிர்க் குயிராய்க்கலந்து நிற்கும் சிவபரம்பொருளை. ஊனினை யுருக்கி உள்ளொளிபெருக்கி’ (திருவாசகம்-544) எனவும்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/78&oldid=515234" இலிருந்து மீள்விக்கப்பட்டது