பக்கம்:திருவருட் பயன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

நூலமைப்பு முறையில் பொதுமறையாகிய திருக்குறள் யாப்பினையும் பொருளமைப்பினையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கிய உமாபதி சிவாசாரியார், இறைவனது திருவருள் ஞானம் பெற்ற சிவநெறிச் செல்வர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள் நூல்களாகிய திருமுறைகளிலே சிறப்பாக விளக்கப்பெறும் திருவருளுண்மையாகிய நற்பொருட் பயன்களைச் சிறப்புடைப் பொருள்களாகக் கொண்டு இதனை இயற்றியுள்ளாராதலின் இந்நூல் திருவருட்பயன் என்னும் பெயர்த்தாயிற்று.

இந்நூலிலுள்ள பத்ததிகாரங்களும் பதிமுதுநிலை உயிரவைநிலை, இருண்மலநிலை, அருளதுநிலை, அருளுருநிலை, அறியுநெறி, உயிர்விளக்கம், இன்புறுநிலை, அஞ்செழுத்தருள்நிலை, அணைந்தோர்தன்மை என இம்முறையில் அமைந்துள் ளன. இவ்வமைப்பு முறையினை அடியொற்றியே இந்நூலாசிரியர் திரட்டியுதவிய திருமுறைத்திரட்டும் பத்ததிகாரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. இப்பகுப்பு முறையைக் கூர்ந்து, நோக்குங்கால் திருவருட்பயனாகிய இச் சித்தாந்த சாத்திரத்திற்கும் இந்நூலாசிரியர் திரட்டியுதவிய தேவார அருள் முறைத்திரட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டென்பது இனிது புலனாம். மூவர் தேவாரங்களிலிருந்து திரட்டப்பெற்ற இத்திருமுறைத் திரட்டு ஆளுடைய பிள்ளையார் முதன்முதல் திருவாய்மலர்ந்தருளிய தோடுடையசெவியன்’ என்னும் திருப்பாடல் முதலாகத் தொண்ணுற்றென்பது திருப்பாடல்களையுடையது. இது, சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலியனவாக இவ்வாசிரியர் இயற்றிய சைவசித்தாந்த நூல்களில் விரித்துரைக்கப்படும் சித்தாந்த நுண்பொருளுக்குரிய முன்னூல் சான்றாக இவ்வாசிரியரால் திரட்டப்பெற்றதாகும். இவ்வுண்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/8&oldid=513079" இலிருந்து மீள்விக்கப்பட்டது