பக்கம்:திருவருட் பயன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

விளக்கம்: அனாதியே உயிரைப்பற்றியுள்ள இருள்மலம் உயிர்க்குயிராகவுள்ள ஒளியாகிய சிவஞானம் மேலிடுங்கால் தன் வலியழிந்து சிதையுமாறு கூறுகின்றது.

இதன்கண் ஒன்று’ என்றது ஆணவ இருளையென்றும். 'ஒளி, என்றது மாயாகாரியத்தினை என்றும் நிரம்ப அழகிய தேசிகர் பொருள்கொண்டார். ஒன்று என்றது பூத இருளை எனவும் ஒளி என்றது விளக்கு மின்மினி முதலிய ஒளியுடைப் பொருள்களை எனவும் கொண்டு, 'பூத இருளானது மேலிட்ட காலத்து விளக்கு மின்மினிக்கு இடங்கொடாதிருந்ததேயானால் ஆன்மாவை ஆணவமலமானது ஒருகாலமும் விட்டு நீங்காது” எனப் பொருளுரைத்தார் சிந்தனையுரையாசிரியர். எனவே பூத இருள் விளக்கு முதலியவற்றின் ஒளிக்கு விலகியிடந்தருதல் போன்று, ஆணவஇருளும் மாயாதது விளக்குக்கு இடந்தந்து ஒரளவு விலகக்கூடியதே என்பது கருத்தாயிற்று மிகுதல் - மேற்படுதல். கவர்தல் என்றது கட்புலனாதலை. உள்ளம் - ஆன்மா.

ஆணவத்தினை 'இருள்' என வழங்கினாற்போன்று ஆணவ வல்லிருளால் அடரப்படாது மேற்பட்டு விளங்கும் சிவஞானத்தை 'ஒளி' என வழங்குதல் இந்நூலாசிரியர் மேற்கோண்ட சொல்மரபாகும். இந்நுட்பம்,

 "ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம், ஒன்று
                                 மேலிடின் ஒன்று
  ஒளிக்கும், எனினும் இருள் அடராது"      (1)

என வரும் கொடிக்கவியால் இனிது புலனாதல் காணலாம். சிவஞானமாகிய ஒளிக்கும் ஆணவமாகிய இருளுக்கும் இடம் ஒன்றே. உயிரின்கண் ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளித்து நின்றாலும் ஒளியாகிய சிவஞானத்தினை ஆணவ மாகிய இருள் மீதுார்ந்து மறைத்தல் இயலாது’ என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/86&oldid=515365" இலிருந்து மீள்விக்கப்பட்டது