பக்கம்:திருவருட் பயன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



65

அறிவை ஒரளவு விளங்கச்செய்யும் பொருளேயன்றி மறைக் கும் பொருளன்று’ என அறிவுறுத்துவது, அடுத்து வரும் குறள் வெண்பாவாகும்.

      30. விடிவா மளவும் விளக்கனைய மாயை
          வடிவாதி கன்மத்து வந்து.

இ-ள் : சிவனுடைய ஞானமாகிய கிரணந்தோன்றி ஆணவ இருள் நீங்குமளவும் மாயையினிடத்திலே நின்றுந் தனு கரண புவன போகங்கள் தத்தம் புண்ணிய பாவங்களுக்கு ஈடாகத் தோன்றிச் சிறிதே மல இருளினை நீக்கி விடய வின்பங்களைக் காட்டும் விளக்குகள் போலவாம் என்க.

மலமும் மாயையும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறுடைய என்பதாயிற்று. சிறிதே நீக்குதல் விளக்கனைய என்பதனம் பெற்றாம். விடிவாமளவும் என்பதனால், மாயா காரியங்கள் சங்கார காலத்தில் தமது காரணத்திலே யடங்கிலும், உயிர்களை விட்டு நீங்கினவன் றென்பதாம். 'இருளிரி சுடரிரண்டா நின்ற முழுமல மாயை' என்றருளிச் செய்தவாறு காண்க.

இதனால், அவ்வவிச்சையால் நீங்காது தொடர்ந்து நின்ற மாயை கருமம், இாண்டின் முறைமையுங் கூறப்பட்டது.

விளக்கம் : இருள்மலமும் மாயையும் தம்முள் மாறாதலை உணர்த்துகின்றது.

மாயை வடிவு ஆதி, கன்மத்து வந்து, விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய என முடிக்க. விடிதல்-இருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/88&oldid=515366" இலிருந்து மீள்விக்கப்பட்டது